LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF
-

ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. இந்த கீரையை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.


பல வகையான மருத்துவ குணங்களை அடங்கிய இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.


வல்லாரையில் அடங்கிய சத்துக்கள் :


வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.


இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.


இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இந்த கீரையை உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.


வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு. 


வல்லாரையின் மருத்துவ குணங்கள் :


வல்லாரை கீரை உடல் உஸ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. 


மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும்.


வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.


இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


வல்லாரை, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கிறது.


யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.


வல்லாரைக் கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும். 


உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. 


எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும்.வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 


வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். 


வல்லாரைக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.   


வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.


வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். 

by Swathi   on 07 Jun 2014  13 Comments
Tags: Vallarai Keerai   Memory Power Increase   வல்லாரை கீரை   ஞாபக சக்தி அதிகரிக்க           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வல்லாரை கீரை சட்னி வல்லாரை கீரை சட்னி
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்? ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்?
ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !! ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !!
கருத்துகள்
24-Apr-2020 09:26:27 Madusudanan said : Report Abuse
Is it bad to eat sweet items after having vallarai keerai ppriyal?
 
02-Sep-2019 15:39:28 Harish said : Report Abuse
என் மகன் வயது 2 வல்லானர லேகியம் கொடுக்கலாமா தயவு செய்து பதில் கூறவும்
 
02-Feb-2018 01:12:07 vanitha said : Report Abuse
எனது மகன் வயது பைவ்.வல்லாரை லேகியம் கொடுக்கலாமா ? கொடுக்கும் முறை கூறவும்.நன்றி
 
17-Nov-2017 11:01:41 ஸ்.lakshmanan said : Report Abuse
வெரி உசெபிஉல் .வ்தேரே இ ஸல் கெட் தி ஸ்பினாச்
 
30-Aug-2017 12:21:53 A.shanmugakumar said : Report Abuse
வல்லாரை லேகியம் செய்வது எப்படி? வள்ளலாரை லேஹியத்தின் பலன்கள் கூறவும்.
 
22-Jun-2017 13:39:27 rajan said : Report Abuse
வல்லாரை பவுடர் கிடைக்குமா?8525034798
 
28-Apr-2017 00:06:53 சக்தி vel said : Report Abuse
எங்களிடம் ௨ஏக்கர் பரப்பில் வால்லா ைர க் கீர பயீர் ெசய்ய படூகிறது ேதைவப் பட்ால் அனுகவும் இடம் : காக்களுர் ,திருவள்ளூர் மாவட்டம் ேபான்: 8220236718
 
03-Apr-2017 11:05:17 Malar said : Report Abuse
வல்லாரை லேகியத்தை எவ்வாரு உன்ன வேண்டும்?
 
26-Aug-2016 07:58:23 Sreenivasan said : Report Abuse
Fine and useful article we liked it
 
18-Nov-2015 09:04:31 rmakkendran said : Report Abuse
வல்லாரை கீரை வல்லற்படு எப்படி
 
31-Mar-2015 07:48:58 charumathy said : Report Abuse
இதில் உள்ள கருத்துகள் யாவும் மிக உபயோகமாக உள்ளன . ஆல் தி பெஸ்ட் .டு increase மெமரி பவர் what we should ?
 
24-Jan-2015 22:25:53 selvam said : Report Abuse
வல்லாரை பௌடரை தண்ணீரில் கலந்து சாப்பிடலாமா மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை பௌடரை எப்படியெல்லாம் சாப்பிடலாம்
 
29-Dec-2014 06:38:32 sakthi said : Report Abuse
best information from to you. Pls give more products
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.