|
||||||||
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள் - திருமதி லலிதா சுந்தரம் |
||||||||
"வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள் ".
தொகுப்பாசிரியர் திருமதி லலிதா சுந்தரம். மீனாட்சி பதிப்பகம். முதல் பதிப்பு 2013 விலை ரூபாய் 140 மொத்த பக்கங்கள் 260.
#இது ஒரு திருக்குறள் ஆய்வு புத்தகம் .
திருக்குறள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய புத்தகம் .மொத்தம் 53 பெருந்தகையாளர்கள் பெருமிதத்தோடு 53 தலைப்புகளில் எழுதி இருக்கின்ற புத்தகம் இது.
**
1. அறத்துப்பால் காட்டும் மக்கட்பண்பு
பேராசிரியர் பி.விஜயா
2. திருக்குறள் காட்டும் அறம்
திருக்குறள் அஇேராமசாமி
3. திருக்குறள் கூறும் அறநெறி
திருக்குறள் தூதர் இலலிதா சுந்தரம்
4. திருக்குறள் வாழ்வியல் நெறி
திருமதி அனுசேகர்
5. வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறிகள்
திருஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 குறள்வழி குடும்ப வாழ்க்கை
திருமதி.எஸ்.பி.சற்குணபாண்டியன்.
7.செந்நெறியே இல்லற நெறி
திருமதி க.இரத்தினகுமாரி
8. மகளிர் போற்றும் நெறி
முனைவர் கஸ்தூரி ராஜா
9. இல்லறத்தில் பெண்மை அறம்
திருமதி வாசுகி கண்ணப்பன்
10. திருக்குறள் கூறும் மனித நேயம்
திரு.தாழை க.இளவழகன்
11. வாழ்வியலில் வள்ளுவம்
திருமருதப்ப பாண்டியன்
12 குறள் கூறும் காதல் வாழ்க்கை
கவிஞர் குமரிச்செழியன்
13. அன்பு நெறி
திரு. ஒநேசிமஸ் தயாளகரன்
14. குறள் காட்டும் சான்றாண்மை
திருக்குறள் ஞானமுருகு
15. நல்வாழ்வு நெறி
திருமதிசெல்விராஜன்
16. திருக்குறள் நெறிகள் - 1
திரு.சி.செல்லையா (கனடா)
17. திருக்குறள் நெறிகள் - 2
திருமதி.இந்திரா மணியம் (டெல்லி
18. திருக்குறள் நெறிகள் - 3
திருமதி அம்சவேணி
19. பெரியாரைப்போற்றும் நெறிகள்
திரு.அஞானானந்தன்
20.மெய்ந்நெறி
புலவர் த.ஆறுமுகம்
21. திருக்குறளும் இறைவழிபாடும்.
கவிஞர் சீனிதிருநாவுக்கரசு
22. திருவள்ளுவரின் தெய்வ நெறி
திருமதி.ஐ.பிரேமலதா
23. இருளறுக்கும் இனிய குறள்
திரு வி.முருகேஷ்
24.முந்நெறிகள்.
முனைவர் அ.ஆறுமுகம்
25. இயல்புடைய மூவர் .திரு. விருகை ஆடலரசு
26. ஊக்க நெறி
கவிஞர் அனு வெண்ணிலா
27. காலம் அறிதல்
கவிஞர் கூடலூர் அதேயநாதன்
28. வினையாற்றும் நெறி
திருக்குறள் நூதர் முன் ஒளி
29. தலையாய பண்புகள்
திருக்குறர் இராவராட்சுமி
30. நாடு வாழ நல்லநெறி
மாண்பமை நீதியரசர் எஸ். நடராசன்
31. ஆமையும் ஒம்புல நெறியும்
திருமதி பார்மதி தண்டன்
32. பொருள் ஈட்டும் நெறி
திருமதி ஜெகதீஸ்வரி
33. ஈதலும் எதிர்தலும்
திருக்குறள் பா.சுகுமாரன்
34. ஈத்துவக்கும் இன்பம்
திரு.இராகு இலக்குவன்
35. திருக்குறள் ஒப்புரவு
மருத்துவபேதை ஜேகண்முகநூதன்
36. மனநலம்
மருத்துவபேதை ரேழிகண்ணாப்பல்
37. திருக்குரள் அறியியல் நூல்
திருமதி மணிமேகலை கண்ணன்
38. சித்த மருத்துவமும் உடல் நலமும்
39. அளவறிந்து உண்க
திரு.இராயில்சைமுத்து
40. திருக்குறளில் கட்டடவியல்
முனைவர் எஸ்.வி.அருணாசலம்
41. திருக்குறளில் தற்சிந்தனை
முனைவர் அரளா ராஜகோபாலன்
42. வள்ளுவர் கூறும் மனித உடைமை
திருமதி.ச.சிதம்பரம்
43. திருக்குறள் உணர்த்தும் உடைமைகள்
திருமதி விஜயலட்சுமி ராமசாமி
44. மனிதவாழ்வுக்கு மகிழ்வுதரும் மகாத்மியம்
45. புதிய நூற்றாண்டில் திருவள்ளுவமே தழைக்க - டாக்டர் .இளங்கம்பன்
46. திருவள்ளுவப் பிரகாசர்
திரு.கெ.பக்தவத்சலம்
47. திருவள்ளுவரும் சர்வக்ஞரும்
முனைவர் மலையமான்
48. வாழ்த்துரை
திருமதி, சிவஞானஜோதி
49. திருக்குறளில் நட்பு நெறி
திருமதி.ஆர்.எஸ்.கே.பாக்யலட்சுமி
50. தமிழரின் சமுதாயக் கோட்பாடு
பேராசிரியர் ச.முத்துகுமரன்
51. குறளில் குற்றமும் கொற்றமும்
மாண்பமை நீதியரசர் எஸ்.மோகன்.
52. கற்போம் கற்பிப்போம்
திருமதி செவில்லியம்டெல்
53. திருக்குறள் வாழ்க்கைப்படகு
கவிஞர் கூசௌந்தர்.
***
மனிதனுக்கு என்றும் உயர்வைத் தருவது அவனது பண்பே. மனிதனிடத்து உள்ள எல்லாம் அவனை விட்டு நீங்கினாலும், அவனது பண்பு மட்டும் அவன் இறந்த பின்பும் மக்களிடையே அவன் பெயரை நிலை நிறுத்தும் எனலாம் .
திருக்குறள் அறத்துப்பால் காட்டும் பண்புநெறிகளை மட்டும் இவண் எடுத்துக் கொள்ளப்பட்டு இக்கட்டுரையும் அதனைப் பற்றி விளக்குகிறது.
1)அறத்துப்பாலும் பண்புநெறிகளும்:
வள்ளுவத்தில் முதற் பாலாக அறத்துப் பால் அமைகின்றது. இதில் 38 அதிகாரங்களை வள்ளுவர் அமைத்துள்ளார். வள்ளுவர் இல்வாழ்பவன். இல்லாள். அரசன். ஒற்றன். அமைச்சன். படைவீரன். தூதுவன். முனிவன். பரத்தை. பிறன் இல் விழைபவன். கள் உண்பவன், திருடன் போன்ற பலருடையப் பண்புகளையும் விரித்துத் தம் நூலில் கூறிச் சென்றுள்ளார்.
வள்ளுவர் கூறும் பண்புகள் எக்காலத்திலும் எந்நாட்டவருக்கும் பொருந்துவனவா உள்ளன. பண்புகளே ஒரு மனிதனை சமூகத்தில் உயர்வாகவும் தாழ்வாகவும் மதிக்க வைக்கும்.
எனவே வள்ளுவர் கூறும் பண்புகளை பக்க எல்லைகளாக் கருத்தில் கொண்டு, அறத்துப் பாலை மட்டும் எடுத்துக் கொண்டு இக்கட்டுரை ஆராய்கின்றது.
வாழ்வுக்கு உதவும் பண்புகள்:
மனிதன் ஒழுக்கத்தோடு வாழ இறைநெறியே அடிப்படையாகும். இறைவனை வணங்குவதால் ஐம்புலன்களையும் அடக்குவதோடு பொய் சொல்லாத வழியிலும் வாழ்வதால் நெடுங்காலம் அவர் வாழ்வார் என்றார். (கு. 6)
மேலும், உலகில் ஒருவன் நன்கு அற வாழ்வு வாழ வேண்டுமானால் அவனுக்கு நல்ல பண்புகள் வேண்டும். பெருமை, பேராசை,சீற்றம், துன்பம்தரும் பேச்சு ஆகிய நான்கையும் தவிர்த்து வாழ்வதே அறமாகும் என்கிறார் வள்ளுவர் (குறள் 35)
2)முந்நெறிகள்
பசியும் பாலுணர்வும் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானவை. சிந்தனை அறிவைப் பெற்ற மனிதன் மட்டுமே இவற்றை ஒழுங்கு படுத்தி வாழ்க்கையை வளர்த்து வந்திருக்கிறான். நிறுவனங்கள் பலவற்றையும் உருவாக்கியிருக்கிறான். உருவாக்கிய நிறுவனங்களுள் முதன்மையானது குடும்பம் ஆகும்.
இல்லத்திலிருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை இல்லறம் எனப்படுத்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கு நிலையே குடும்பம், இல்லறம் ஆகியவற்றின் வளர்ச்சி நிலையாகும்.
தமிழ் இலக்கியங்களில் கூறப்பெறும் அகப்பொருள் இதனைத் தெளிவுபடுத்தும் .தலைவனும் தலைவியும் உள்ளம் ஒன்றி இணைந்து வாழும் வாழ்வே அடிப்படை அக வாழ்வாகும்.
அகவாழ்வின் வளர்ச்சி நிலையிலிருந்தே குடி அரசு, படை, அமைச்சு போஸ் பல நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன.
எனவே அனைத்து நிறுவனங்களுக்கும் அடிப்படையான அக வாழ்வை இலக்கியங்கள் தெளிவு படுத்துகின்றன. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் வாழிடம், உணவுமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை மாறுபடலாம். ஆனால் கணவன் மனைவி. தலைவன் தலைவி என்ற நிலை என்றென்றும் மாறுபடா. இலக்கிய நிலைபேற்றுக்கு இதுவே அடிப்படையாய் அமைகிறது.
இலக்கியங்களை நோக்கும் போது இவ்வடிப்படையிலேயே நோக்க வேண்டும். இவ்வடிப்படை நோக்கு வாழ்வியலுக்கு ஏற்ற பல்வகை வழிகளை நமக்கு என்றென்றும் காட்டும், இத்தகைய வாழ்வியல் இலக்கியங்களுள் திருக்குறள் வையகத்துக்கே வழிகாட்டும் வளம் பெற்றது என்பதை நாம் அறிவோம். திருக்குறளிலிருந்து வாழ்வியல் அடிப்படையிலான மூன்று நெறிகள் இக்கட்டுரையில் கட்டப்படுகின்றன.
3)ஊக்க நெறி:
உலகில் தோன்றி நிலைத்த மூத்த மொழிகளுள் தலையாயது நமது அருமைத் தமிழ் மொழியாகும். இதன் சிறப்பின் செம்மை அயல் நாட்டவரையும் தன்னகத்தே ஈர்த்து அணைத்து: அறிவூற்றினை அகழ்ந்தும். ஆழ்ந்தும் அகலப்படுத்தியும் கற்றுணர்ந்து அகமகிழச் செய்தது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே
அமுதம் எனும் பொருள் நீண்டநாள் வாழ்ந்திட வைப்பது. இளமையை இருத்துவது என்பர். ஆனால் அவ்வாறு அமுதம் உண்டோரையும் வாழ்ந்தாரையும் நாம் யாங்கணும் கண்டதில்லை, ஆனால் உலகப் பொதுமறையென்றும் பைபிள். குரான் எனும் மத நூல்களுக்கு அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான திருக்குறள் நூல்.
உடலுக்கு மட்டும் வளம் தராமல் உள்ளத்திற்கும் அறிவிற்கும் வாழ்க்கை வளத்திற்கும் வளமார்ந்த செந்நெறிகட்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்கிறது.
தீந்தமிழ் திருக்குறள் தனிமனித நலம், சமுதாய நலம் அனைத்தையும் உள்ளடக்கி நடைமுறைச் சாத்தியமான ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறது.
அறியாமையும் கல்லாமையும் வறுமையும் இருக்கும் நாட்டில் சமத்துவமும் ஒருமைப்பாடும் நிலவுவதென்பது இயலாத ஒன்று. மனிதப்பண்புகள் மலராத காலை மனித வாழ்வு சிறப்புகுன்றி மங்கிப் போகும்.
மனிதன் போற்றிக் காத்திட வேண்டிய ஒழுக்க நெறிகளில் தலையாயது மனிதப்பண்பு.
இதையே திருக்குறள் கல்வியின் பயனாகவும், அறிவின் பயனாகவும், ஒழுக்கத்தின் உயர்வான நெறியாகவும் திறம்படக் கூறுகிறது.
கல்வியின் பயனாய்க் கசடற கற்க வேண்டுமென்றும். சாந்துணையும் கற்க வேண்டும் என்றும் வலியுறுத்துவது போன்றே மனிதனை முன்னேற்றப்பாதையில் செலுத்தம் என்று கூறுகிறது வள்ளுவம்.
இவ்வாறு 53 நெறிகளை வள்ளுவம் காட்டுவதாக 53 பெருந்தகையாளர்கள் கூறியிருக்கிறார்கள் இந்த புத்தகத்தில்.
திரு.நா.கருணாமூர்த்தி (முகநூல் பதிவு )
|
||||||||
by Swathi on 03 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|