LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் சுற்றுலா

மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள்


மிகப்பிரமாண்டமாகப் புதுப்பிக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டத்தைக் காணக்  கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிடுகிறார்கள்.

கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிர்வது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட, சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தின் முன் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளின் போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு செல்லும் போது வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.

அப்போது, பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப் பார்த்து வருந்தியதோடு ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன் பயனாக, வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு-ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது குறள் மணிமாடம். 100 பேர் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

27,000 சதுர அடிப் பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 வாகனங்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.

275.56 சதுர அடி பரப்பளவில் 'குறளங்காடி' என்ற  திருக்குறள், வள்ளுவர் குறித்த பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய வேயா மாடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை
தினங்களில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிடுவதற்காக ஏராளமானார் குவிந்து வருகிறார்கள். 


by hemavathi   on 29 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா?  - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.