LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு அதிகரிப்பு

அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்​தது.

மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்​கம் அளித்​துள்​ளார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக அந்த நாட்​டுக்கு அனுப்​பப்​படும் இந்​திய பொருட்​களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது.

கடந்த ஆண்டு ஏப்​ரல்- ஜூலை மாதங்​களில் அமெரிக்காவுக்கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 27.6 பில்​லியன் டால​ராக இருந்​தது. நடப்​பாண்டு ஏப்​ரல் முதல் ஜூலை வரையி​லான காலத்​தில் இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 33.5 பில்​லியன் டால​ராக உள்​ளது. கடந்த ஆண்டை ஒப்​பிடும்​போது தற்​போது 21.4 சதவீதம் வரை ஏற்​றுமதி அதி​கரித்​திருக்​கிறது.

கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் அதிக பொருட்​களை அமெரிக்கா​வுக்கு அனுப்பி வரு​கின்​றனர். இதன்​காரண​மாக இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. இவ்​வாறு பொருளா​தார நிபுணர்​கள் தெரி​வித்​தனர். 

இந்​திய ஆடை ஏற்​றும​தி​யாளர்​களின் கூட்​டமைப்​பான ஏஇபிசி தலை​வர் சுதிர் சேக்ரி கூறும்​போது, “வரி விகிதம் தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக அமெரிக்க குழு​வினர் ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்​லிக்கு வரு​வ​தாக திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. தற்​போதைய சூழலில் அமெரிக்க குழு​வின் டெல்லி பயணம் ஒத்தி வைக்​கப்பட்டு உள்​ளது. எனினும் அடுத்த சில வாரங்​களில் இரு நாடு​கள் இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்பட வாய்ப்​பிருக்​கிறது” என்று தெரி​வித்​தார். இந்​திய வைர வியா​பாரி​கள் கூறும்​போது, “அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் இந்​திய வைரங்​கள் மற்​றும் தங்க நகைகள் சுமார் 28 சதவீதம் வரை அதி​கரித்​திருக்​கிறது. 

 

 

by hemavathi   on 19 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம் 82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.