LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
-

வனப்பொறியாளர் யார்?

தூங்கி விழிச்ச சிங்கத்துக்கு அன்னைக்கு என்னைக்கும் இல்லாத ஒரு வருத்தம். அது தன்னோட எடத்துப்பாத்துச்சு "ச்சே நான் யாரு இந்தக் காட்டுக்கே ராஜா. அப்படிப்பட்ட நான் எதுக்கு இந்த குகைக்குள்ளே, இருட்டா இருக்குற எடத்தில வாழணும். ஏன் எனக்கு ஒரு மாளிகையிலே தங்கற தகுதியில்லையா" அப்படீண்ணு நெனச்சிது.
அது அந்த குகையிலிருந்து வேகமாக வெளியே வந்துச்சு. அருகிலிருந்த பாற மேல ஏறி நிண்ணுச்சு. தலையை மேலை உயர்த்திட்டு பயங்கரமாக கர்ஜிச்சது. அது காட்டு விலங்ககளை எல்லாம் வரச்சொல்றதுக்கான அறிவிப்பு. அந்த கர்ஜன காடெல்லாம் முழங்கிச்சு. அதக் கேட்ட எல்லா விலங்குகளும் அரக்கப் பரக்க பாறயைப் பாத்து ஓடி வந்துச்சுக.
ராஜா ஏதோ முக்கிய சேதி ஒண்ணச் சொல்லப்போறாருங்கறது மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சுது. ஆனா அது என்ன சேதிங்கறதை அங்களா ஊகிக்க முடியல. காட்டு ராஜா சிங்கம் எல்லாரையும் பாத்தது. அப்புறம் தொண்டையைக் கனச்சுது. பிறது சத்தமாக பேசத் தொடங்கிச்சு.
"நான் யாரு இந்தக் காட்டுக்கே ராஜா. உங்களுக்கு அரசன். என்னப் பாத்து பக்கத்துக் காட்டல இருக்கறவங்களெல்லாம் பயந்து நடுங்கறாங்க ஆனா... " அப்படீண்ணு ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திச்சு. சிங்கத்தோட மொகத்தில கவலை தெரிஞ்சுது.
"ராஜா என்னாச்சு ஏதாவது பிரச்சனைண்ணா சொல்லுங்க, நாங்க இருக்கோம்லா" அப்படீண்ணு புலி சொல்லிச்சு.
"காட்டுக்கு ராஜாவானா நா இந்த குகையிலா வாழணும். அது உங்களுக்கே அவமானமாயில்லை. எனக்கு நீங்க ஒரு அரண்மனை கட்டித்தரணும். அந்த அரண்மனையில் நான் அப்படி கம்பீரமா வாழணும். என்ன நான் சொல்றது. உங்களுக்கெல்லாம் சம்மதம்தானே. இதுல யாருக்காவது எதிர்ப்பு இருக்கா" அப்படீண்ணு கேட்டது.
ராஜா பேச்சுக்கு மறு பேச்சு உண்டா. அப்படியே எதிர்த்தாலும் எதித்தவங்களை சிங்கம் விட்டு வைக்குமா?
பாறைக்குக் கீழே நிண்ணிட்டிருந்த எல்லா விலங்குகளும் சம்மதம்ணு தலையை பலமா ஆட்டுச்சுக. 
"சரி அப்படீண்ணா வேலையை இப்பவே தொடங்குங்க" அப்படீண்ணு உத்தரவு போட்டிச்சு சிங்கம். ஆனா யாரும் வேலையைத் தொடங்கல. யாரும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தாங்க
"அரண்மனை கட்ட யார் யார் வேணும்" சிங்கம் கேட்டுச்சு.
"ஆசாரி, கொத்தனார்... மேஸ்திரிண்ணு" ஆளாளுக்கு ஒவ்வொருத்தரோடு பேரச் சொன்னாங்க.
" அப்படீண்ணா அவங்கள கூட்டீட்டு வாங்க ஏன் சும்மா நிக்கிறீங்க" சிங்கத்தோட மொகத்திலே கோபம் எட்டிப் பாத்துச்சு. 
இவங்க பேசறதையெல்லாம் கேட்டிட்டு பக்கத்து மரத்திலெ உக்காந்திருந்த குரங்கு மெல்ல கீழ எறங்கி வந்துச்சு.
"அரசருக்கு ஆயிரம் வந்தனம். எனக்கு ஒரு யோசனை அப்படீண்ணுது''  அது அடக்க ஓடுக்கமா நிண்ணுகிட்டு சொல்லிச்சு.
"ம் நீ என்ன சொல்ல நெனக்கிற.. சொல்லு''  சிங்கம் குரங்குக்குப் பேச அனுமதி கொடுத்திச்சு.
"அரண்மனை கட்ட வேலைக்காரங்களை கூப்பிடறுத்துக்கு முன்னாடி எப்படிப்பட்ட அரண்மனை கட்டணும்ணு தீர்மானிக்க வேண்டாமா? அரண்மனையில் எத்தனை அறைகள் இருக்கணும். ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கணும்? அப்படீண்ணு யோசிக்க வேண்டாமா? '' குரங்கு கேட்டிச்சு.
.
"ஆமாம். நீ சொல்றது சரிதான். சில நேரத்தில ஒன்னோட மூளையும் வேலை செய்யுது" அப்படீண்ணு சிங்கம் குரங்கைப் பாராட்டிச்சு.. குரங்கு பெருமையாக எல்லோரையும் பார்த்திச்சு. 
.
"எப்படிப்பட்ட அரண்மனை கட்டணும்ணு யார் முடிவு செய்யறது? '' சிங்கம் கேட்டுச்சு
"அது ஒரு எஞ்சினியரோட வேலை''  குயில் தன் கொஞ்சம் குரல் சொல்லிச்சு.
"ஓ அப்படீண்ணா என் கனவு மாளிகையை வடிவமைக்கப்போற அந்த எஞ்சினியர் யார்?'' சிங்கம் ஆசையோட கேட்டுச்சு.
எறும்பு ஒரு எட்டு முன்னால் வந்திச்சு. "காட்டு ராஜாவுக்கு வணக்கம் என்னோட வீட்டுக்கு பல வாசல்கள் இருக்கு. ஒரு வாசல் வழியா நொழஞ்சா எந்த வாசல் வழி வேணும்ணாலும் வெளியே வரலாம். ஏதிரிகளாலே உங்கள ஒண்ணும் பண்ண முடியாது. நான் தானே காட்டு எஞ்னியருக்குப் பொருத்தமான ஆளு" அப்படீண்ணு எறும்பு சொல்லிச்சு.
"வேண்டாம் வேண்டாம் மழ பேஞ்சு வெள்ளம் வந்தால் நீ கட்ற வீட்டுக்குள்ளே வெள்ளம் புகுந்து விடும். நீ வேண்டாம்''  பாம்பு சொல்லிச்சு.
"என் வீடு தேன் கூடு. ரொம்ப ஆழகான வீடு. அதுமாதிரி பெரிசா இருக்ற மாதிரி உங்க வீட்டை எப்படிக் கட்டறதுண்ணு நான் சொல்றேன்''  ராணித்தேனீ சொல்லிச்சு
"நீ எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சின்னதாத்தான் இருக்கும் சிங்கராஜா வாழறத்துகேத்த மாதிரி அரண்மனை கட்ட உன்னாலே முடியாது" அப்படீண்ணு கரடி சொல்லிச்சு.
அப்படி ஆளாளுக்கு அவங்கவங்க வீட்டைப் பத்திப் பெருமையாகச் சொன்னாங்க ஆனா ராஜாவுக்கு எதுவும் திருப்தியா இருக்கலெ. கடைசியில் ஒருவர் முன்னாடி வந்தார். ராஜாவுக்கு வணக்கம் தெரிவிச்சிட்டு பேசத் தொடங்கினாரு.
"நான் ஊஞ்சலாடும் வீட்டுக்குச் சொந்தக்காரி. எத்தன பலமா காத்தடிச்சாலும் வீடு ஊஞ்சல் மாதிரி ஆடுமே தவிர கீழே விழாது. என்னோட வீட்டுக்கு வாசல்  வீட்டோட அடியிலிருக்கும்.
மழ பேஞ்ச தண்ணீ வீட்டுக்குள்ளே வராது. மட்டுமல்ல வீட்டைப் பத்தி தெரியாவதங்களுக்கு வீட்டோட வாசல் எங்கேயிருக்கேண்ணே தெரியாது. நீங்க ஒத்துகிட்டா நான் தரையில் அந்த மாதிரி ஒரு வீட்டை எப்படிக் கட்டறதுண்ணு சொல்றேன்ணு சொல்லிச்சு.
எல்லாரும் கை தட்டி பாராட்டுத் தெரிவிச்சாங்க. ராஜாவுக்கும் சந்தோஷமாச்சு.
அப்படி அவங்களை சிங்க ராஜாவோட அரண் மனை கட்டறதுக்கான எஞ்னியராத் தேர்ந்தெடுத்தாங்க. அது யாரு தெரியுமா?
நம்ம தூக்கணாங்குருவி.
தூக்கணாங்குருவியோட வீட்டைப் பாத்திருக்கிங்களா? பக்கத்திலெ எங்கேயாவது இருந்தா பாருங்க. ரொம்ப ஆழகாக இருக்கும்.

தூங்கி விழிச்ச சிங்கத்துக்கு அன்னைக்கு என்னைக்கும் இல்லாத ஒரு வருத்தம். அது தன்னோட எடத்துப்பாத்துச்சு "ச்சே நான் யாரு இந்தக் காட்டுக்கே ராஜா. அப்படிப்பட்ட நான் எதுக்கு இந்த குகைக்குள்ளே, இருட்டா இருக்குற எடத்தில வாழணும். ஏன் எனக்கு ஒரு மாளிகையிலே தங்கற தகுதியில்லையா" அப்படீண்ணு நெனச்சிது.

அது அந்த குகையிலிருந்து வேகமாக வெளியே வந்துச்சு. அருகிலிருந்த பாற மேல ஏறி நிண்ணுச்சு. தலையை மேலை உயர்த்திட்டு பயங்கரமாக கர்ஜிச்சது. அது காட்டு விலங்ககளை எல்லாம் வரச்சொல்றதுக்கான அறிவிப்பு. அந்த கர்ஜன காடெல்லாம் முழங்கிச்சு. அதக் கேட்ட எல்லா விலங்குகளும் அரக்கப் பரக்க பாறயைப் பாத்து ஓடி வந்துச்சுக.

ராஜா ஏதோ முக்கிய சேதி ஒண்ணச் சொல்லப்போறாருங்கறது மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சுது. ஆனா அது என்ன சேதிங்கறதை அங்களா ஊகிக்க முடியல. காட்டு ராஜா சிங்கம் எல்லாரையும் பாத்தது. அப்புறம் தொண்டையைக் கனச்சுது. பிறது சத்தமாக பேசத் தொடங்கிச்சு.

"நான் யாரு இந்தக் காட்டுக்கே ராஜா. உங்களுக்கு அரசன். என்னப் பாத்து பக்கத்துக் காட்டல இருக்கறவங்களெல்லாம் பயந்து நடுங்கறாங்க ஆனா... " அப்படீண்ணு ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திச்சு. சிங்கத்தோட மொகத்தில கவலை தெரிஞ்சுது.

"ராஜா என்னாச்சு ஏதாவது பிரச்சனைண்ணா சொல்லுங்க, நாங்க இருக்கோம்லா" அப்படீண்ணு புலி சொல்லிச்சு.

"காட்டுக்கு ராஜாவானா நா இந்த குகையிலா வாழணும். அது உங்களுக்கே அவமானமாயில்லை. எனக்கு நீங்க ஒரு அரண்மனை கட்டித்தரணும். அந்த அரண்மனையில் நான் அப்படி கம்பீரமா வாழணும். என்ன நான் சொல்றது. உங்களுக்கெல்லாம் சம்மதம்தானே. இதுல யாருக்காவது எதிர்ப்பு இருக்கா" அப்படீண்ணு கேட்டது.

ராஜா பேச்சுக்கு மறு பேச்சு உண்டா. அப்படியே எதிர்த்தாலும் எதித்தவங்களை சிங்கம் விட்டு வைக்குமா?

பாறைக்குக் கீழே நிண்ணிட்டிருந்த எல்லா விலங்குகளும் சம்மதம்ணு தலையை பலமா ஆட்டுச்சுக. 

"சரி அப்படீண்ணா வேலையை இப்பவே தொடங்குங்க" அப்படீண்ணு உத்தரவு போட்டிச்சு சிங்கம். ஆனா யாரும் வேலையைத் தொடங்கல. யாரும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தாங்க"அரண்மனை கட்ட யார் யார் வேணும்" சிங்கம் கேட்டுச்சு.

"ஆசாரி, கொத்தனார்... மேஸ்திரிண்ணு" ஆளாளுக்கு ஒவ்வொருத்தரோடு பேரச் சொன்னாங்க.

" அப்படீண்ணா அவங்கள கூட்டீட்டு வாங்க ஏன் சும்மா நிக்கிறீங்க" சிங்கத்தோட மொகத்திலே கோபம் எட்டிப் பாத்துச்சு. 

இவங்க பேசறதையெல்லாம் கேட்டிட்டு பக்கத்து மரத்திலெ உக்காந்திருந்த குரங்கு மெல்ல கீழ எறங்கி வந்துச்சு.

"அரசருக்கு ஆயிரம் வந்தனம். எனக்கு ஒரு யோசனை அப்படீண்ணுது''  அது அடக்க ஓடுக்கமா நிண்ணுகிட்டு சொல்லிச்சு.

"ம் நீ என்ன சொல்ல நெனக்கிற.. சொல்லு''  சிங்கம் குரங்குக்குப் பேச அனுமதி கொடுத்திச்சு.

"அரண்மனை கட்ட வேலைக்காரங்களை கூப்பிடறுத்துக்கு முன்னாடி எப்படிப்பட்ட அரண்மனை கட்டணும்ணு தீர்மானிக்க வேண்டாமா? அரண்மனையில் எத்தனை அறைகள் இருக்கணும். ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கணும்? அப்படீண்ணு யோசிக்க வேண்டாமா? '' குரங்கு கேட்டிச்சு.."ஆமாம். நீ சொல்றது சரிதான். சில நேரத்தில ஒன்னோட மூளையும் வேலை செய்யுது" அப்படீண்ணு சிங்கம் குரங்கைப் பாராட்டிச்சு.. குரங்கு பெருமையாக எல்லோரையும் பார்த்திச்சு. ."எப்படிப்பட்ட அரண்மனை கட்டணும்ணு யார் முடிவு செய்யறது? '' சிங்கம் கேட்டுச்சு

"அது ஒரு எஞ்சினியரோட வேலை''  குயில் தன் கொஞ்சம் குரல் சொல்லிச்சு.

"ஓ அப்படீண்ணா என் கனவு மாளிகையை வடிவமைக்கப்போற அந்த எஞ்சினியர் யார்?'' சிங்கம் ஆசையோட கேட்டுச்சு.

எறும்பு ஒரு எட்டு முன்னால் வந்திச்சு. "காட்டு ராஜாவுக்கு வணக்கம் என்னோட வீட்டுக்கு பல வாசல்கள் இருக்கு. ஒரு வாசல் வழியா நொழஞ்சா எந்த வாசல் வழி வேணும்ணாலும் வெளியே வரலாம். ஏதிரிகளாலே உங்கள ஒண்ணும் பண்ண முடியாது. நான் தானே காட்டு எஞ்னியருக்குப் பொருத்தமான ஆளு" அப்படீண்ணு எறும்பு சொல்லிச்சு.

"வேண்டாம் வேண்டாம் மழ பேஞ்சு வெள்ளம் வந்தால் நீ கட்ற வீட்டுக்குள்ளே வெள்ளம் புகுந்து விடும். நீ வேண்டாம்''  பாம்பு சொல்லிச்சு.

"என் வீடு தேன் கூடு. ரொம்ப ஆழகான வீடு. அதுமாதிரி பெரிசா இருக்ற மாதிரி உங்க வீட்டை எப்படிக் கட்டறதுண்ணு நான் சொல்றேன்''  ராணித்தேனீ சொல்லிச்சு

"நீ எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சின்னதாத்தான் இருக்கும் சிங்கராஜா வாழறத்துகேத்த மாதிரி அரண்மனை கட்ட உன்னாலே முடியாது" அப்படீண்ணு கரடி சொல்லிச்சு.

அப்படி ஆளாளுக்கு அவங்கவங்க வீட்டைப் பத்திப் பெருமையாகச் சொன்னாங்க ஆனா ராஜாவுக்கு எதுவும் திருப்தியா இருக்கலெ. கடைசியில் ஒருவர் முன்னாடி வந்தார். ராஜாவுக்கு வணக்கம் தெரிவிச்சிட்டு பேசத் தொடங்கினாரு.

"நான் ஊஞ்சலாடும் வீட்டுக்குச் சொந்தக்காரி. எத்தன பலமா காத்தடிச்சாலும் வீடு ஊஞ்சல் மாதிரி ஆடுமே தவிர கீழே விழாது. என்னோட வீட்டுக்கு வாசல்  வீட்டோட அடியிலிருக்கும்.
மழ பேஞ்ச தண்ணீ வீட்டுக்குள்ளே வராது. மட்டுமல்ல வீட்டைப் பத்தி தெரியாவதங்களுக்கு வீட்டோட வாசல் எங்கேயிருக்கேண்ணே தெரியாது. நீங்க ஒத்துகிட்டா நான் தரையில் அந்த மாதிரி ஒரு வீட்டை எப்படிக் கட்டறதுண்ணு சொல்றேன்ணு சொல்லிச்சு.

எல்லாரும் கை தட்டி பாராட்டுத் தெரிவிச்சாங்க. ராஜாவுக்கும் சந்தோஷமாச்சு.

அப்படி அவங்களை சிங்க ராஜாவோட அரண் மனை கட்டறதுக்கான எஞ்னியராத் தேர்ந்தெடுத்தாங்க. அது யாரு தெரியுமா?

நம்ம தூக்கணாங்குருவி.

தூக்கணாங்குருவியோட வீட்டைப் பாத்திருக்கிங்களா? பக்கத்திலெ எங்கேயாவது இருந்தா பாருங்க. ரொம்ப ஆழகாக இருக்கும்.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
பேராசை பெருநட்டம் பேராசை பெருநட்டம்
அனைவரும் சமம்- என்.குமார் அனைவரும் சமம்- என்.குமார்
அன்பு- என்.குமார் அன்பு- என்.குமார்
குறைகூறல் வேண்டாம்- என்.குமார் குறைகூறல் வேண்டாம்- என்.குமார்
மரம் என்ற வரம்- என்.குமார் மரம் என்ற வரம்- என்.குமார்
கதைக்கேட்ட கதாநாயகர்கள்- என்.குமார் கதைக்கேட்ட கதாநாயகர்கள்- என்.குமார்
கவலையில்லா மனது- என்.குமார் கவலையில்லா மனது- என்.குமார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.