LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

யுத்த காண்டம்-வீடணன் முடி சூட்டு படலம்

 

வீடணனுக்கு இராமன் தேறுதல் கூறி, பின் வீடணனுக்கு முடி சூட்டுமாறு இலக்குவனை ஏவுதல்
'வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.' 2
என்று கூறி, இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3
தேவர்கள் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தல்
சூழ் கடல் புனலும், பல் தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4
வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5
இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுதல்
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6
வீடணன் அரியணையில் வீற்றிருத்தல்
கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7
தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்,
நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8
முடி புனைந்த வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து, இராமபிரானை அடைந்து, தொழுதல்
முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9
'விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா, 
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10
வணங்கிய வீடணனை இராமன் தழுவி, அவனுக்கு நீதி கூறல்
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமையே அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!' என்றான் - மறை தந்துளான். 12
பன்னும் நீதிகள் பல் பல கூறி, 'மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13
மிகைப் பாடல்கள்
மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1
செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ......................................கம்மி......
.................................................................... 5-1
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2
பொய்யினுக்கு ஒரு வெ..........................
..............................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3
வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,
ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1
'ஆதி நாளில், "அருள் முடி நின்னது" என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1
'"வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது" என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்' என்றான். 13-1

வீடணனுக்கு இராமன் தேறுதல் கூறி, பின் வீடணனுக்கு முடி சூட்டுமாறு இலக்குவனை ஏவுதல்
'வருந்தல், நீதி மனு நெறி யாவையும்பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா,அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்றுஏது இல் வானர வீரரொடு ஏகி, நீஆதி நாயகன் ஆக்கிய நூல் முறைநீதியானை நெடு முடி சூட்டுவாய்.' 2
என்று கூறி, இளவலோடு ஆரையும்வென்றி வீரன் விடை அருள் வேலையில்,நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3
தேவர்கள் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தல்
சூழ் கடல் புனலும், பல் தோயமும்,நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,பாழி துற்று அரி பற்றிய பீடமும்,தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4
வாச நாள் மலரோன் சொல, மான்முகன்காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடுஈசனே முதலோர் வியந்து ஏத்திட,தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5
இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுதல்
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,ஐயன் ஆணையினால், இளங் கோளரிகையினால் மகுடம் கவித்தான் அரோ. 6
வீடணன் அரியணையில் வீற்றிருத்தல்
கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடுஅரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7
தேவர் பூமழை, சித்தர் முதலினோர்மேவு காதல் விரை மலர், வேறு இலாமூவரோடு, முனிவர், மற்று யாவரும்,நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8
முடி புனைந்த வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து, இராமபிரானை அடைந்து, தொழுதல்
முடி புனைந்த நிருதர் முதலவன்அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9
'விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீகலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா, அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10
வணங்கிய வீடணனை இராமன் தழுவி, அவனுக்கு நீதி கூறல்
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,இருமையே அரசாளுதி, ஈறு இலாத்தரும சீல!' என்றான் - மறை தந்துளான். 12
பன்னும் நீதிகள் பல் பல கூறி, 'மற்றுஉன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13
மிகைப் பாடல்கள்
மாருதிச் செல, மங்கலம் யாவையும்மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;வீர விற் கை இளவல் அவ் வீடணன்வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1
செய்த மா மணி மண்டபத்தே செழுந்துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,எய்து வானவ......................................கம்மி.......................................................................... 5-1
மேவி நாரதனே முதல் வேதியர்ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்கூவி, ஓம விதிமுறை கொண்டிட,தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2
பொய்யினுக்கு ஒரு வெ........................................................................................உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3
வேத ஓசை விழா ஒலி மேலிட,நாத துந்துமி எங்கும் நடித்திட,வேத பாரகர் ஆசி விளம்பிட,ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1
வீர மா முடி சூடிய வீடணன்வீர ராகவன் தாள் இணை மேவிட,ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1
'ஆதி நாளில், "அருள் முடி நின்னது" என்றுஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!வேத பாரகம் வேறுளர் யாவரும்ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1
'"வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,நெஞ்சினில் துயர் நீக்கியது" என்று, நீஅஞ்சனைப் புதல்வா! அருள்வாய்' என்றான். 13-1

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.