|
||||||
வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர். |
||||||
வீரமாமுனிவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் போன்றவற்றை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகத் திறந்து திறந்து வைத்தார்.
இத்தாலிய நாட்டை சேர்ந்தவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் வகையில், துாத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி கிராமம், புனிதப் பரலோக மாதா ஆலய வளாகத்தில், ஒரு கோடி ரூபாயில், வீரமாமுனிவர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவைப் போற்றும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நினைவு இல்லத்தில், 20 லட்சம் ரூபாயில், அவரது மார்பளவு சிலை; சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தாலுகா மகிபாலன்பட்டியில், 23.26 லட்சம் ரூபாய் செலவில், புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத் துாண் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை முதல்வர், கடந்த 20/01/2024 அன்று திறந்து வைத்தார். |
||||||
by Kumar on 25 Jan 2024 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|