LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை...

ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் திரையிட்டதில் அந்த படத்தை வாங்கிய வினியோகிஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் லிங்கா திரைப்படத்தை வாங்கி விநியோகித்துள்ள வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியான தகவலை மறுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள்., லிங்கா வெளியான நேரத்தில் தமிழகமெங்கும் அரையாண்டு தேர்வுகள் நடந்ததாலும், நாங்கள் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டதாலும் எதிர்பார்த்த அளவை விட சற்று வசூல் குறைந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் தியேட்டர்கள் நிரம்பி வழிகிறது.

இதுவே வெற்றிக்கு சாட்சி. லிங்கா மக்களுக்கு பிடித்த படம், விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றி எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது. மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Lingaa Movie   Box Office   Vendhar Movies   Vendhar Movies Arikkai   வேந்தர் மூவிஸ்   லிங்கா   அறிக்கை  
 தொடர்புடையவை-Related Articles
100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!! 100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி.... தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.