LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

வெந்தயத்தின் 10 முக்கிய மருத்துவக்குணங்கள் !!

வெந்தயத்தை வறுத்து, அதனுடன் வறுத்த கோதுமையை சேர்த்து, டீ, காபிக்கு பதிலாகா அருந்தி வந்தால், உடல் வெப்பம் குறையும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து சாப்பிட்டு வர அது மலசிக்களைப் போக்கும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
 
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

by Swathi   on 08 Jan 2015  16 Comments
Tags: வெந்தயம்   வெந்தயம் மருத்துவ குணங்கள்   Fenugreek Benefits   Vendhayam Benefits   Vendhayam Uses        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வெந்தயத்தின் 10 முக்கிய மருத்துவக்குணங்கள் !! வெந்தயத்தின் 10 முக்கிய மருத்துவக்குணங்கள் !!
கருத்துகள்
15-Mar-2019 04:18:59 அருள் said : Report Abuse
நான் தினமும் வெந்தயதை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருகிறேன் இதனால் ஏற்படும் நன்மைகளை ஈமெயில் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் மேலும் எனது தொப்பையை குறைக்க ஏதேனும் வழி இருந்தால் அதற்கும் வழி கூறுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன் நன்றி
 
06-Apr-2018 07:45:17 சுந்தரவதனம் said : Report Abuse
காலையில் இரவு ஊறவைத்து வெந்தயம். சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையுமாஔ
 
03-Feb-2018 09:49:08 bhuvi said : Report Abuse
சார் surgery பன்னிருகவங்களுக்கு piles இருக்கு medicineஎடுத்துட்டு erungana.அவங்க venthayamசாப்பிடலாமா.pilesகுணமாகுமா?
 
10-Oct-2017 14:28:54 mathi said : Report Abuse
Daily morning வெந்தயம் சாப்பிட்டால் என ஆகும் .அது நல்லாத என்பதனை எனக்கு நீங்கள் கூற வேணும் . தினமும் சாப்பிட்டால் நல்லது தானா
 
19-Jul-2017 12:06:40 Karthika R said : Report Abuse
Very useful tips for health.i am request for my health problem please answer to me .Vellai paduthal Long time .I am very Low strength.natural home remedies sollunga . thank you
 
05-May-2017 07:11:17 கோகிலா Rajanikanth said : Report Abuse
வெந்தயம் 200g , ஓமம் 100g , காட்டு சீரிஸ்கம் 50g varuththu பொடி seidu இரவு சாப்பிட இரத்த சீனி குறையுமா?ப்ளஸ் ansure
 
09-Apr-2017 11:20:54 N.Lavan said : Report Abuse
Sir, Vanakkam.... Ennoda name lavan, Nan indian Armyla work pandren yanaku mudi romba vilukuthu..... Athuku ethavathu treatment iruka.......?
 
23-Jan-2017 09:14:07 sathyamurthy said : Report Abuse
How to use fenugreek for prevent hair fall... Please anyone say correct information...
 
25-Oct-2016 01:03:24 ABOOBACKER said : Report Abuse
வெந்தயத்தை இரவில் படுக்க போகும் முன் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாமா ?
 
23-Aug-2016 11:58:36 vajjiraveluravi said : Report Abuse

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும்.  

 
23-Aug-2016 11:52:41 வஜ்ஜிரவேலு ரவி said : Report Abuse
சர்க்கரை அளவு வயிறு வலி உடல் வலிமை மலச்சிக்கல் அதிக நார் சக்தி
 
26-Feb-2016 09:03:09 vijay said : Report Abuse
Kkkk
 
17-Sep-2015 08:01:29 chitra said : Report Abuse
என்னாகும் சொல்லுங்க அந்த பலங்கள ப்ளீஸ் .
 
03-Aug-2015 16:02:54 Govindasamy S said : Report Abuse
இரவு நீரில் ஊறவைத்த 10 கிராம் வெந்தயத்தை நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறேன். இதனால் என்ன பலன் என்று தயவு செய்து தெரிவிக்கவும். how reduce in belly அன்புடன govindasamy S
 
15-Jul-2015 04:04:04 சூர்யா said : Report Abuse
வெந்தயம் வேறு ஏதற்கெல்லாம் பயன்படுகிறது
 
12-Jan-2015 00:24:51 ந பாலகிருஷ்ணன் said : Report Abuse
இரவு நீரில் ஊறவைத்த 10 கிராம் வெந்தயத்தை நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறேன். இதனால் என்ன பலன் என்று தயவு செய்து தெரிவிக்கவும். அன்புடன் ந பாலகிருஷ்ணன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.