LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழ் அறிவியலாளர்கள்

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (உயிரியல்)

வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952), தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும். நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ராமகிருஷ்ணன். இவருக்கு முன்னர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் நோபல் பரிசைப் பெற்றிருந்தனர். இவருக்கு 2011 திசம்பர் 31 இல் பிரித்தானிய அரசு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது


வாழ்க்கைக் குறிப்பு


வெங்கட்ராமன் 1952 இல் சிதம்பரத்தில் சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார். அவரது தந்தையின் பணி காரணமாக குஜராத்திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள வடோதரா நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார். இயற்பியலில் பட்டப்படிப்பை பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் 1976 இல் ஐக்கிய அமெரிக்காவில் ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் சான் டியேகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் உயிரியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி 1978 இல் முடித்தார் 


கல்விக்குடும்பம்


வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜல‌ஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார். இவரது தமைக்கையார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.


நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC)


தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது.


துறை-சார் அனுபவங்கள்


1978–82 யேல் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் முனைவர்-பட்டத்திற்குப் பின்னான ஆய்வாளர் -- "E கோலை"யின் சிறியதொரு ரைபோசோம் துணையலகினால் நியூட்ரான் சிதறல் பற்றியது 


1983–95 புரூக்கேவன் தேசிய ஆய்வகத்தின் உயிரியல் பிரிவில் பணி:


1983–85 உதவி உயிரி-இயற்பியலாளர்.


1985–88 துணை உயிரி-இயற்பியலாளர்.


1988–90 உயிரி-இயற்பியலாளர்.


1990–94 பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட உயிரி-இயற்பியலாளர்.


1994–95 பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட மூத்த உயிரி-இயற்பியலாளர்.


1995–99 யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் பேராசிரியர்; மூலக்கூறு உயிரியல், உயிரி வேதியியல் பிரிவு முதுகலைத் திட்டக்குழு உறுப்பினர்.

 

1999- இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் உள்ள MRC ஆய்வகத்தின் குழுத்தலைவர்;


2006- கட்டமைப்புக் கல்விப்பிரிவின் இணைத்தலைவர்.


2008- கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் உதவி-பெறும் மூத்த ஆய்வாளர்


ஆய்வியல் விருப்பங்கள்


தற்போது


ரைபோசோம்களின் அமைப்பும் செயல்பாடும்.


ரைபோசோம்கள் மீதான ஆண்டிபயாட்டிக்குகளின் செயல்பாடு.


முன்பு


குரோமாட்டின்களின் அமைப்பு.


X-கதிர் படிகவியல்.


நியூட்ரான் ஒளிச்சிதறல்


நோபல் பரிசு


2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுத்தொகை 10 மில்லியன் க்ரோனர் (14 இலட்சம் அமெரிக்க டாலர்) பரிசை வென்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ’’அவர்கள் உருவாக்கிய முப்பரிமாண மாதிரிகள் வெவ்வேறு நுண்ணுயிர்-எதிரிகள் எவ்வாறு ரைபோசோம்களுடன் பிணைப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குகின்றன; இக்கண்டுபிடிப்புகள் புதிய நுண்ணுயிர்-எதிரிகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன’’ என்று நோபல் பரிசுகளை அளிக்கும் ராயல் சுவீடிஷ் அகாதெமி ஆவ் சயன்சசு தெரிவித்துள்ளது.


நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனின் ஆய்வு


 

ராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய, 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Venkatraman Ramakrishnan   வெங்கட்ரமணன்   Tamil Structural biologist              
 தொடர்புடையவை-Related Articles
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (உயிரியல்) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (உயிரியல்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.