|
||||||||||||||||||
வெண்மனப் பாக்கள் 14-17 |
||||||||||||||||||
எங்கும் குழப்பம் எதிலும் நடுக்கம் தங்கும் மனதில் தடைகள் உடைக்கும்
துணிவும் வருமோ துணையாய்த் தன்னம்பிக்கை
அணியும் பெருமை அணி!
தடைகள் எல்லாம் தாண்டும் வலிமை
கடைகள் எங்கும் காணேன் விற்பதற்கு
மடமைகள் விட்டொழியும் மதிதான் நலிவு
எடைகள் சுமப்பது ஏது!
காணும் எதிலும் காட்சியாய்த் தடைகள்
நாணும் காரிய நடையில் நேர்ந்திடும்
ஆற்றல் வளர்த்து ஆற்றிடும் செயலே
காற்றின் சுகமெனக் காண்!
உதவும் கரங்களில் உவப்பது நடக்கநேர்
கதவும் திறந்து கடமை முடிக்கும்
தடைகள் எதையும் தாண்டும் முயற்சி
உடைகள் எனத்துணிவை உடுத்து!
.. நாகினி |
||||||||||||||||||
by Bknagini on 15 Sep 2015 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|