|
||||||||||||||||||
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி |
||||||||||||||||||
![]() அறிமுகம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர் சவுதி அரேபியாவில் எந்திர பொறியியல் துறையில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சவுதி அரேபியத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக 16 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் முத்தமிழ் மன்றத்தின் செயல்பாட்டாளர் மற்றும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சவுதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு தளங்களில் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணிகள்: தமிழால் வளர்ந்தவர் இவர். தமிழ்ச் சமூகத்தால் வளர்க்கப்பட்டவர். ‘கடவுளின் தேன்’ என்று அழைக்கக் கூடிய அளவிற்கு மிகச்சிறப்பான நல்லியல்புகளைக் கொண்ட நாடு சவுதி அரேபியா என்று கூறுகிறார். ‘இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை’ என்ற தலைப்பில் சவுதி முழுவதுமாக தமிழ் சார்ந்த சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். முத்தமிழ் மன்றத்தில் கலை சார்ந்து தொடங்கிய இவருடைய பயணம் சமூகப்பணியாகப் பரிணாமம் பெற்றது. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற .இந்த வாழ்க்கையில் கல்வி என்பது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. சவுதி அரேபியாவில் வழங்கப்படும் கல்வியில் தமிழும் ஒரு பாடமாக இடம் பெற வேண்டும் என முயற்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். தமிழர்களுக்கான பணிகள்: வேலைவாய்ப்பினைத் தேடி சவுதி அரேபியாவிற்கு வரும் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களை முடிந்தவரை நிவர்த்தி செய்யும் பணிகளைத் திரு. சுரேஷ் பாரதி மற்றும் அவரது நண்பர்கள் கொண்ட தன்னார்வ குழுவானது செய்து வருகிறது. அரபு மொழியோ, ஆங்கில மொழியோ தெரியாவிட்டாலும் கூட, சவுதி அரேபியாவில் உள்ள காவல் துறையை எளிதில் அணுகலாம் என்ற நிலையை அங்கு பணிபுரியும் தமிழர்களுக்கு இவரது குழு உருவாக்கித் தந்திருக்கிறது. மேலும் அங்கே இறக்கும் இந்தியர்களின் உடலைத் தாயகம் அழைத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவரது குழு செய்து வருகிறது. இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு அங்கே ஏற்படும் பணிச்சுமைகளை நீக்குதல், இறக்கும் போது வழங்கக்கூடிய இழப்பீடுத் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருதல், சம்பளப் பாக்கி போன்றவற்றைப் பெற்றுத் தருதல், பாதுகாப்பாகத் தாயகம் அனுப்புதல், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்ற பணிகளைத் தொடர்ந்து இவர் செய்து வருகிறார். எல்லைகளைக் கடந்த அன்பு: தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் உற்றார் ஒருவரும் இல்லாமல் வேலைதேடி பெரும்பாலான இந்தியர்கள் சவுதி அரேபியாவிற்கு வருகின்றனர். அவர்களுக்கு அங்கு ஒரு நம்பிக்கையாக இருக்கக்கூடிய இந்தியத் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாட்டாளர்களாகத் திரு. சுரேஷ் பாரதி மற்றும் பலர் செயல்படுகின்றனர். மாவட்ட, மாநில, நாட்டின் எல்லைகளைக் கடந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு பக்கபலமாக இவர் செயல்படுகிறார். தொல்காப்பியரின் பிள்ளைகளாகிய நாம் தொல்காப்பியருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொல்காப்பிய சவுதி அரேபிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார் திரு. சுரேஷ் பாரதி அவர்கள் மற்றும் திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்து சவுதி மக்களுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்து திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தார். |
||||||||||||||||||
by Lakshmi G on 22 Oct 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|