LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்

வாழ்க்கையை ஆக்கும் சிற்பி

எண்ணமே எக்காலத்திற்கும்
வாழ்க்கையின் சிற்பி,
எண்ணி எண்ணிட
இனிதே பயக்கும்.

தீய எண்ணம்

உண்மையில் எதிரி
உனக்கு உண்டு எனில்,
உள்ளத்தி லெழும்
ஒழுங்கற்ற எண்ணமே.

பெரியோர் இயல்பு


உணவில் எளிமை,
உழைப்பில் கடுமை,
ஒழுக்கத்தில் உயர்வு,
உத்தமர் இயல்பு.

பெரியார்


அறிவு, சுகம், பொருள்,
அரசியல், விஞ்ஞானம்
ஐந்து தத்துவங்கள்
அறிந்தவன் பெரியோன்.

அறிவின் அளவு

அண்டமனைத்தும் ஓர்
அடியால் அளக்கலாம்
அணுக்குள் அடக்கலாம் , அவ்
அறிவின் அளவையறி

எண்ணமும் செய்கையும்

எண்ணு, சொல்,செய்
எல்லோர்க்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு.

எண்ணத்தின் வலிமை

எண்ணியவெல்லாம்
எண்ணியபடியே யாகும்,
எண்ணத்தில், உறுதியும்,
ஒழுங்கும் அமைந்திடில்

உண்மை இன்பம்

பொங்குக பொங்குக!
பூரித்து உள்ளமெலாம்.
எங்கும் நிறைந்தநம்
ஏகாந்த நிலையறிந்து.

தியாகியும் ஞானியும்

கடமையுணர்ந்து அதைச் செயலில்
காட்டுபவன் தியாகியாம்,
கடவுளே மனிதனான
கருத்தறிந்தோன் ஞானியாம்.

கடவுளும் கடமையும்

கடமையில் உயர்ந்தவர்
கடவுளை நாடுவார்.
கடவுளை அறிந்தவர்
கடமையில் வாழுவார்.

கவலைக்கு மருந்து

இயற்கையை அறிந்துஒத்து
எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும்
கவலையாய் மாறாது.

ஆறு குணங்கள்

அறிவின் சலனமே காமமாதி ஆறுகுணங்கள்
ஆழ்ந்து ஆராய்ந்து, அறிந்தவிடம் நிர்குணம்.

உனது பெருமை

அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை.

பெண்ணின் பெருமை

பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்.

எண்ணம் பிறக்குமிடம்

எண்ணத்தின் சக்தி
இயல்பு அறிந்திடில்,
எண்ணம் பிறக்கும்
இடமும் விளங்கும்.

மூவாசை அளவறிந்தால் கேடில்லை

மண்மீது பெண் துணையால்
பொன் கொண்டே வாழ்கின்றோம்,
மாற்றுவதேன் மூவாசை ?
மதியுடனே பயன் கொள்வோம்.

by Swathi   on 02 Mar 2013  1 Comments
Tags: வேதாத்திரி மகரிஷி   Vethathiri Maharishi   Quotes   சிந்தனைகள்           
 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
26-Mar-2016 00:36:20 கிருஷ்ணமுர்த்தி said : Report Abuse
மிஹவும் உயர்வஹவுள்ளது தொடர்ஹா பனி. வாழ்க !
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.