|
||||||||
வெயில் மழை புழுதி |
||||||||
சில நாளில் முன்பு
எனக்குள்ளே ஒருவன் இருந்தான்.
அவனுக்கும் கண்கள் இருந்தன.
காதுகளும் உண்டு.
இதயம் மட்டும் மற்றவர் போல் இல்லாமல்
மென்மையாய் இருந்ததனால் அவன்
இந்த உலகத்தைப் பார்த்து அழுதான்.
அதுதான் மழை!
அவன் இங்குள்ள கொடுமைகள் தாங்காமல்
விட்ட பெருமூச்சு
இப்போது மரங்களிலே படிந்துள்ள புழுதி!
அவன் எப்போதுமே குறைகளைத் தேடிக்கொண்டிருந்தான்.
பறவைகளுக்கு
இரு சிறகுகள் போதாது
நான்கு சிறகு தேவையென்று நினைத்தான்!
இந்தச் சூரியனையும்
அதைக் கண்டு பயருகின்ற நிலவையும்
சேர்த்துவைத்துச் சந்தோஷம் பார்க்க
ஒரு பாலம் போடத் துணிந்தான்.
மனிதர்கள் சிரித்தார்கள்.
தம் பலங்கள் தெரியாமல்தான்
அவர்கள் நகைத்தார்கள்.
எல்லாரும் ஒன்றுபட்டால் பூமியின் சுழற்சியையும்
நிறுத்த முடியுமென்று
அவர்களுக்கு விளங்கவில்லை
எரிச்சல் பட்ட அவன்தான்
வானத்தின் இரவுகளில் வெள்ளியைப்போல் ஓடுபவன்.
அவனது கோபம்தான்
வெயில்!
சில நாளில் முன்பு எனக்குள்ளே ஒருவன் இருந்தான். அவனுக்கும் கண்கள் இருந்தன. காதுகளும் உண்டு. இதயம் மட்டும் மற்றவர் போல் இல்லாமல் மென்மையாய் இருந்ததனால் அவன் இந்த உலகத்தைப் பார்த்து அழுதான். அதுதான் மழை!
அவன் இங்குள்ள கொடுமைகள் தாங்காமல் விட்ட பெருமூச்சு இப்போது மரங்களிலே படிந்துள்ள புழுதி! அவன் எப்போதுமே குறைகளைத் தேடிக்கொண்டிருந்தான்.
பறவைகளுக்கு இரு சிறகுகள் போதாது நான்கு சிறகு தேவையென்று நினைத்தான்!
இந்தச் சூரியனையும் அதைக் கண்டு பயருகின்ற நிலவையும் சேர்த்துவைத்துச் சந்தோஷம் பார்க்க ஒரு பாலம் போடத் துணிந்தான். மனிதர்கள் சிரித்தார்கள். தம் பலங்கள் தெரியாமல்தான் அவர்கள் நகைத்தார்கள். எல்லாரும் ஒன்றுபட்டால் பூமியின் சுழற்சியையும் நிறுத்த முடியுமென்று அவர்களுக்கு விளங்கவில்லை எரிச்சல் பட்ட அவன்தான் வானத்தின் இரவுகளில் வெள்ளியைப்போல் ஓடுபவன்.
அவனது கோபம்தான் வெயில்!
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|