LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

வெயிற்கால வியர்வைத் துளிகள்.. -வித்யாசாகர்

 

1
தெ
ருவோரம் ஒதுங்கிநின்றேன்
மழையில்லை
செருப்பறுந்தக் காலில்
சுட்டது வெயில்;

செருப்பின்றி எதிரே
மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி
சுட்டது மனம்!
--------------------------------------------------------------------

2
தா
கத்திற்கு
பெப்சி வாங்கப்போனேன்
பசிக்கு
பிச்சைக் கேட்டு
நிற்கிறது ஒரு குழந்தை!!
--------------------------------------------------------------------

3
பு
கைப்பிடிக்க இறங்கி
ஒரு கடையோரம் நின்றேன்

நிழலுக்கு ஒதுங்க
ஒரு நாய்க்குட்டி வந்து
என் காருக்கடியில் படுத்துக்கொண்டது..
--------------------------------------------------------------------

4
தியநேரம்
உச்சிவெயிலிலைக் கடிந்தபடி
உணவகத்துள் நுழைந்தேன்

வியர்வையுள் நனைந்தபடி
நெருப்பருகில் நின்று சமைத்துக்கொண்டிருந்தார்
அதே உச்சிவெயிலில்
ஒரு பெரியவர்!!
--------------------------------------------------------------------

5
வீ
டுகளுக்கு
குளிரூட்டிக் கொண்டார்கள்
மனிதர்கள்..

மரங்களுக்கும்
பறவைகளுக்கும்
வெப்பத்தைக் கூட்டிக்கொண்டு..
--------------------------------------------------------------------
6
கரங்களில்
வெப்பம் பிரச்சனையில்லை
மின்சாரம்தான் பிரச்சனை

கிராமங்களில்
வெப்பமும் பிரச்சனை
மின்சாரமும் பிரச்சனை..
--------------------------------------------------------------------

7
வெ
யில் பற்றி எழுதுவோருக்கு
நினைவிலேயே
இருப்பதில்லை
பெண்கள் நிற்கும் அடுப்படியும்
துணி காயவைக்கும் மொட்டைமாடியும்..
--------------------------------------------------------------------

8
வா
சலில்
வெய்யிலில் அமர்ந்திருக்கும்
பாட்டியைத் தாண்டிப்போய்
சந்தைக்குள்ளிருக்கும் கடையில்
வாழையிலையோ
பூவோ
காய்கறியோ வாங்கிப்போகும்
நமக்கெல்லாம்
பாட்டி பிழைத்தாலென்ன
பிழைக்காவிட்டால் தானென்ன..
--------------------------------------------------------------------

9
ரை பெடல் அடித்து
மிதிவண்டி ஓட்டும்
சிறுவனுக்கு
வெயிலில் கடைக்கனுப்பிய
இரக்கமற்ற
பக்கத்துவீட்டு அத்தைக் கூட
சாமி தான்..
--------------------------------------------------------------------
10
நா
க்கு தொங்கத் தொங்க
வெயிலில்
மூச்சிரைக்க ஓடி
மரத்தடியில் நின்றது நாய்,
நாம் மரத்தை வெட்டினோம்

ஓடிப்போய்
சேற்றில் படுத்துக்கொண்டது நாய்
இழுத்து
கதவுகளை மூடினோம்

பசியில்
தாகத்தில்
வெயிலில்
சுற்றிச் சுற்றி வந்தது நாய்

அதைப்பற்றி
நமக்கென்ன கவலை, நாம்
சாப்பிட்டுவிட்டு
தூங்கச் சென்றுவிட்டோம்

மீண்டும்
வாசலில் வந்துநின்று
கத்தியது நாய்

ஒரு கல்லெறிந்து
வாசலில் விட்டதும்
ஓடியது ஓடியது மீண்டும்
வெட்டாத ஒரு மரம் தேடி

தேடி

ஓடிக்கொண்டே இருந்தது
அந்த நாய் ..
--------------------------------------------------------------------
வித்யாசாகர்

 

by Swathi   on 17 Jun 2015  0 Comments
Tags: வியர்வைத் துளிகள்   வெயிற்கால வியர்வைத் துளிகள்   Viyarvai Thuligal   Vidyasagar           
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.