|
||||||||
விபத்துக்கள் |
||||||||
என் தோட்டத்தில் இருந்த ரோஜாவில்
நேற்று விழுந்த பூ
இரவு வந்து என்னைத் தழுவி
சுகமா என்று குசலம் விசாரித்த தென்றல் காற்று
ஜன்னல் இடவால் என்னைப் பார்த்து சிரித்த நிலவு
நிலவோடு சேர்ந்த வெள்ளி
எல்லாமே என்னுடைய காதலியின் நினைவுகளைக்
கொண்டு வந்ததைப் போல
இன்று கந்தோரிலும் நீ வந்து மனங்கிள்ளிப் போனாய்
கிழவி....
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்
ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும்
அள்ளி அணைத்து விளையாடக் காத்திருந்து
ஏமாந்து போன உயிர்
இந்தக் காதலியை இழந்த
கோடை காலத்தில் நான் வரண்டு கிடந்தாலும்
மாரியிலே செழித்திருந்த பயல்.
கொஞ்சம் வானம் இருண்டாலே எனக்கு வரும்
பழைய
வெள்ளத்தின் ஞாபகங்கள்.
நீயேன் என் கரம் பிடித்து அழுதாய்?
எதற்கோ நீ அழுதாய்; எனக்குள்ளே
நூறு குயில்கள் ஒன்றாகச் செத்தனவே!
அவளும் இப்படித்தான் என் கரம் பிடித்து அழுதாள்.
அந்த வண்ணத்துப் பூச்சி இறகுதிர்ந்தபோது
தென்னைக்கு மறைவில்
அதன் உச்சிக் குலை அதிரும் சத்தத்தில்
இப்படித்தான் என் கரத்தைப் பிடித்து மடக்கி
அழுதாள்! கிழவி இன்றேன் நீயழுதாய்?
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன்.
ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும்
அள்ளி அணைத்து விளையாட காத்திருந்து
ஏமாந்து போன உயிர்.
எதற்கோ நீ அழுதாய்?
காரணத்தை அறிவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை;
ஆறேழு புகையிரதம் எனக்குள்ளே மோதினவே!
என் தோட்டத்தில் இருந்த ரோஜாவில் நேற்று விழுந்த பூ இரவு வந்து என்னைத் தழுவி சுகமா என்று குசலம் விசாரித்த தென்றல் காற்று ஜன்னல் இடவால் என்னைப் பார்த்து சிரித்த நிலவு நிலவோடு சேர்ந்த வெள்ளி எல்லாமே என்னுடைய காதலியின் நினைவுகளைக் கொண்டு வந்ததைப் போல இன்று கந்தோரிலும் நீ வந்து மனங்கிள்ளிப் போனாய் கிழவி....
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன் ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் அள்ளி அணைத்து விளையாடக் காத்திருந்து ஏமாந்து போன உயிர்
இந்தக் காதலியை இழந்த கோடை காலத்தில் நான் வரண்டு கிடந்தாலும் மாரியிலே செழித்திருந்த பயல். கொஞ்சம் வானம் இருண்டாலே எனக்கு வரும் பழைய வெள்ளத்தின் ஞாபகங்கள். நீயேன் என் கரம் பிடித்து அழுதாய்? எதற்கோ நீ அழுதாய்; எனக்குள்ளே நூறு குயில்கள் ஒன்றாகச் செத்தனவே!
அவளும் இப்படித்தான் என் கரம் பிடித்து அழுதாள். அந்த வண்ணத்துப் பூச்சி இறகுதிர்ந்தபோது தென்னைக்கு மறைவில் அதன் உச்சிக் குலை அதிரும் சத்தத்தில் இப்படித்தான் என் கரத்தைப் பிடித்து மடக்கி அழுதாள்! கிழவி இன்றேன் நீயழுதாய்?
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன். ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் அள்ளி அணைத்து விளையாட காத்திருந்து ஏமாந்து போன உயிர்.
எதற்கோ நீ அழுதாய்? காரணத்தை அறிவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை; ஆறேழு புகையிரதம் எனக்குள்ளே மோதினவே!
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|