|
|||||
விடியும் முன் - திரைவிமர்சனம் !! |
|||||
![]() நடிகர் : வினோத் கிஷன்
நடிகை : பூஜா உமாசங்கர், மாளவிகா மனிகுட்டன்
இயக்கம் : பாலாஜி கே குமார்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
தன் தந்தை சாவுக்கு காரணமான சிறுமியை(மாளவிகா) தேடி அலைகிறார் வில்லன் வினோத். அந்த சிறுமியோடு தப்பி ஓடுகிறார் பூஜா. பூஜா இந்த படத்தில் விலை மாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஜா தப்பித்து விட்டதால், பூஜாவிற்கு புரோக்கர் வேலை பார்க்கும் அமரேந்தனை கொன்றுவிடுவதாக வில்லன் குருப் மிரட்ட, புரோக்கர் அமரேந்தன் இன்னொரு புரோக்கரான தன் நண்பன் லங்கனிடம் அந்த சிறுமியை கண்டுபிடிக்க யோசனை கேட்கிறான். ஒரு வழியாக பூஜா ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருப்பதை தெரிந்ததுகொண்டு, ஸ்ரீரங்கம் புறப்படுகிறார்கள். இதன் பின்னணியில் பூஜா எப்படி விபச்சார தொழிலுக்கு வந்தார் என்பதும், அவருக்கும் அந்த சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பதும், பூஜாவுடன் இருக்கும் சிறுமி எப்படி புரோக்கர் சிங்காரத்திடம் சிக்கினாள் என்பதும் ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.
கொலைவெறியோடு வில்லன் கும்பல் துரத்திக்கொண்டிருக்க, சிறுமி அவர்கள் கைக்கு கிடைத்தாளா? வில்லனின் அப்பா யாரால்? எப்படி? எதற்காக கொல்லப்பட்டான் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்தப் படத்தில் இவர் தான் வில்லன் என நாம் முடிவெடுத்திருந்தாலும் அவரே க்ளைமாக்ஸில் ஹீரோவாக மாறுவது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி!
இந்தப்படத்தில் பூஜா, கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்திருக்கிறார். அந்த சின்னப் பெண்ணுக்காக அவர் தவிக்கிற தவிப்பு இருக்கிறதே சான்சே இல்ல....
சிறுமியாக வரும் மாளவிகா, பூஜாவிடம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பேசும் காட்சிகளில் நமக்கே அவள் மீது கோபம் வந்துவிடுகிறது. அத்தனை ஒரு எதார்த்தமாக நடித்திருக்கிறார் மாளவிகா.
பின்னணி இசையில் சபாஷ் வாங்கினாலும் பாடல்களைப் பொருத்த வரையில் சுமார் என்றே சொல்ல வைக்கிறார் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
திரைக்கதை ஜிவ்வென இழுத்தாலும், அதை இறுதியில் முடித்திருக்கும் விதம் இயக்குனருக்கு சபாஸ் போட வைக்கிறது.
ஒளிபதிவு, எடிட்டிங் அனைத்துமே சூப்பர்.
மொத்தத்தில் விடியும் முன்..... காமெடி இல்லாமல்..... கடைசி வரை சஸ்பென்ஸ்.......... |
|||||
by Swathi on 29 Nov 2013 1 Comments | |||||
Tags: Vidiyum Mun Vidiyum Mun Vimarsanam விடியும் முன் விடியும் முன் சினிமா விமர்சனம் | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|