|
|||||
சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !! |
|||||
கத்தி படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தை விஜயின் பிஆர்ஒ பி.டி.செல்வக்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்மான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கத்தி படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் வேடத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருக்கிறார்களாம். படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. |
|||||
by Swathi on 03 Nov 2014 0 Comments | |||||
Tags: Vijay Vijay Double Role Vijay Simbudevan Movie Mareechan Movie மாரீச்சன் விஜய் விஜய் சிம்புதேவன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|