LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்த வருடமும் விஜய்க்கு தான் முதலிடம் !!

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியில்(சர்ச் இன்ஜினில்) அதிகமாக தேடப்படும் பெயர்களை ஆண்டின் இறுதியில் வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கூகுள் நிறுவனம் தனது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய அளவில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் மோடியைவிட நடிகை சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார்.

அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் :

1. சல்மான் கான் 2. ஷ்ரூக் கான் 3. அக்‌ஷய் குமார் 4. ரன்பீர் கபூர் 5.ஷாகித் கபூர் 6. அமிதாப் பச்சன் 7.வருண் தவான் 8. ரன்வீர் சிங் 9. ஃபவட் கான் 10. இம்ரான் ஹாஷ்மி என இவர்கள்தான் 2014ல் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் :


1.கத்ரீனா கைஃப் 2. தீபிகா படுகோன் 3. அலியா பட் 4.பிரியங்கா சோப்ரா 5.ஐஸ்வர்யா ராய் 6.கரீனா கபூர் 7. அனுஷ்கா ஷர்மா 8. ஷாரதா கபூர் 9.சோனாக்‌ஷி சின்ஹா 10. சோனம் கபூர் ஆகியோர் கூகுள் தேடல் பாலிவுட் நடிகைகளில் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.  

தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபுவும் அவருக்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனும் உள்ளனர். தமிழிலில் அதிகம் தேடப்பட்ட நடிகர் பட்டியலில் முதலிடம் இளைய தளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. அவர் கடந்த ஆண்டிலும் அதிகமாக தேடப்பட்ட பெயருக்கு சொந்தக்காரராகவே இருந்தார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தும், நான்காவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், ஐந்தாவது இடத்தில் உலக நாயகன் கமல் ஹாசனும் உள்ளனர்.

கத்தி படத்தை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளாலும், முரளி விஜய், விஜய் மல்யா, தலைவாசல் விஜய் போன்றோரை தேடும்போது பதிவான விஜய் என்ற வார்த்தைகளும் சேர்ந்து கூகுளில் விஜயை முன்னிலைக்கு கொண்டு வந்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது. 

by Swathi   on 18 Dec 2014  0 Comments
Tags: விஜய்   கூகிள் தேடல்   Google Search   Vijay           
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.