LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

வளையற் சிந்து

வளையல் வாணிகம் வழங்கும் பாவகை
எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்
தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே
ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று
மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்
கருத்து : வளையல் வாணிகத்தில் வழக்கத்தில் இருக்கும் பாவகையான வளையற் சிந்து, எண்சீர் அடிகள் இரண்டு அமைந்தும் அல்லது மூன்று அமைந்தும், தனிச்சொல்லும் இயைபுத்தொடையும் மிகுதியாகப் பெற்றும் ஓரடிக் கண்ணிகளால் பெரிதும் இயன்று விரைவு மும்மை நடையில் செம்மையாக நடக்கும். 
விளக்கம் : தெருவில் வளையல் விற்கும் வணிகர்கள் பாடிச் செல்வதாக உருவானது வளையற் சிந்து, இப்பாடல்வகை வேறு பொருளிலும் பாடப்படுகிறது. இதன் அடிகள் ஒவ்வொன்றும் ஆதிதாளத்தின் மூன்று வட்டணைகளில் அடங்கும் இருபத்து நான்கு சீரடி ஓரடிக் கண்ணியாக வருவது பெரும்பான்மை. இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் 16 சீர் அடிபெற்று சிறுபான்மை வருவதுண்டு. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும். 
காட்டு : 24 சீர் அடி
வாரு மையா வளையல் செட்டி
வளையல் விலை கூறும் - சீர்
மகிழ்ந்து மேகை பாரும் - பசி
வன்கொ டுமை தீரும் - எந்த
மாந கரம் பேர்இ னங்கள்
வகை விபரம் கூறும்.
-(தொடை.மேற்.ப.273)
இப்பாடலில் மேற்குறித்த சீர்களில் முறையே வா-வ-ம-வ-மா-வ என மோனையும், கூறும், பாரும், தீரும், கூறுமென இயைபும் வந்தமை காண்க. 
காட்டு : 16 சீர்
தினத்தெந்தினா தினத்தெந்தினா
தினத்தெந்தினா தினனா
தென்னாதி னாதெந்தினா
தினத்தெந்தினா தினனா
சித்தர்கள்வாழ் மலையருகில்
சிறந்த நல்ல வனத்தில்
தேவிவள்ளி மான் வயிற்றில்
திருவுருவா யாமைந்தாள் 
(வள்ளியம்மை ஆயலோட்டம், குறவஞ்சி, சில்லறைக்கோவை)
இதில் 1, 5, 9, 13 ஆம் சீர்களில் முறையே சி, சி, தே, தி என மோனைத் தொடை அமைந்துள்ளது. தனிச் சொல்லும் இயைபுத் தொடையும் இல்லை. 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.