நாடு முழுவதும் உள்ள கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலிப்பணியிடங்கள் : 14,192 (இதில் தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன், பல்லவன் வங்கிகளில் 600 காலியிடங்கள் உள்ளது)
தேர்வின் பெயர் : IBPS RRB Exam - 2017
கல்வித்தகுதி : Office Assistant :ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணினியின் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
Office Scale - I (Assistant Manager) : ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Office Scale - II (Manager) (General Banking Officer) : ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Office Scale - II (Manager) (Specialist Officer)
a. Information Technology : Electronics/Communication/Computer Science/Information Technology பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
b. Chartered Accountant : CA படித்திருக்க வேண்டும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
c.Law Officer : சட்டப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
d.Treasury Manager: CA அல்லது பைனான்ஸ் பாடத்தில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
e.Marketing Officer : MBA Marketing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
f.Agriculture Officer: Agriculture/Horticulture/Dairy/Animal Husbandry/Forestry/Veterinary Science/Agricultural Engineering/Pisciculture பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Officer Scale - III : ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 50%மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு : Officer Scale - I/ Officer Scale - II பணிகளுக்கு Agriculture/Horiculture/Forestry/Animal Husbandry/Veterinary Science/Agri Engineering/Pisciculture/Arti Marketing & Co - Operation / LAW / Economics / Accountancy பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருப்பது விரும்பத்தக்கது. பணி அனுபவம் தேவைப்படும் பணிகளுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விண்ணப்பதாரர் பெற்று உள்ள பணி அனுபவம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
வயது வரம்பு :
1. Office Assistant : 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Officer Scale - I (Assistant Manager) : 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
2. Officer Scale - II (Manager) : 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
3. Officer Scale - III (Senior Manager) : 21 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பானது 1.7.2017 தேதியின் படி கணக்கிடப்படும். வயது வரம்பில் SC/ST - 5 வருடம், OBC - 3 வருடம், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடம் சலுகை தரப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை தரப்படும். Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விதவைகள், மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு 9 வருடம் சலுகை தரப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். IBPS RRB Exam - 2017 எனப்படும் இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். தேர்வுத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பக்கட்டணம் :
ரூ.600/- (SC/ST/PH பிரிவினருக்கு ரூ.100/- மட்டும்) இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.08.2017
எழுத்துத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் Admit Card-ல் கொடுக்கப்பட்டிருக்கும்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST/PH பிரிவினர் / சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச Pr-Examination Training வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அது பற்றிய விபரத்தை On line விண்ணப்பத்தில் குறிப்பிடவும். தமிழகத்தில் சேலம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்படும்.
|