LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

வினா வெண்பா

 

வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட இது பதின் மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா விடை வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். உமாபதியாரின் கேள்விக்கு அவரது குருவான மறைஞான சம்பந்தர் மறுமொழி கூறுவதுபோல இது அமைக்கப்பட்டுள்ளது. 
நூல்
நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ. 1
இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி 
மருளி நிலையருளு மானும் - கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா 
வீங்குனரு ளாலென் பெற. 2
புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில். 3
கனவு கனவென்று காண்பரிதாங் காணி 
னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா 
யானவத்தை காணுமா றென். 4
அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா 
யாமா ரறிவா ரினி. 5
சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது 
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் 
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான். 6
உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்
தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா 
யானறிவ தெவ்வா றினி. 7
அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல் 
பூணுமிறைக் கென்னாம் புகல். 8
இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா 
வன்றாகி லாமா றருள். 9
ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை. 10
காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர். 11
ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து 
பிரியாவா றெவ்வாறு பேசு. 12
அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா 
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண். 13
வினா வெண்பா முற்றும.

வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட இது பதின் மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா விடை வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். உமாபதியாரின் கேள்விக்கு அவரது குருவான மறைஞான சம்பந்தர் மறுமொழி கூறுவதுபோல இது அமைக்கப்பட்டுள்ளது. 
நூல்

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்முனொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தாநின்றவா றெவ்வாறு நீ. 1
இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவைநீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா வீங்குனரு ளாலென் பெற. 2
புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞானமல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தாஞானமலை யாவாய் நவில். 3
கனவு கனவென்று காண்பரிதாங் காணி னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா யானவத்தை காணுமா றென். 4
அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. 5
சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தாவென்கொண்டு காண்பேனி யான். 6
உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவிதானறிய வாரா தடமருதைச் சம்பந்தா யானறிவ தெவ்வா றினி. 7
அருவே லுருவன் றுருவே லருவன்றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல் பூணுமிறைக் கென்னாம் புகல். 8
இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யுமொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா வன்றாகி லாமா றருள். 9
ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாகநின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகியோங்கியவா றெவ்வா றுரை. 10
காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மைகாண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்வாட்டுநெறி வாரா தவர். 11
ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்என்று மிடையி லிடமில்லை - யொன்றித்தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு. 12
அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்கனாவின்பா லெய்துவிக்குங் காண். 13

வினா வெண்பா முற்றும.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.