|
||||||||
விரைசேர் பொன்மலரே - திருவருட்பா |
||||||||
![]() பாடல் : விரைசேர் பொன்மலரே (திருவருட்பா) ராகம் : தில்லானா தாளம் : ஆதி திஸ்ரம் இயற்றியவர் : வள்ளலார் பாடுபவர் : அஞ்சனாதேவி இசை குரு : திருபுவனம் குரு.ஆத்மநாதன் Semi-classical
இந்த காணொளியில் இரண்டாவது பாடல்: 4:30 நிமிடத்திலிருந்து பார்க்கவும் ...
ஆறாம் திருமுறை / ஆரமுதப் பேறுஅஃதாவது, திருவருள் ஞானமாகிய பெறற்கரிய அமுதத்தைத் தாம் பெற்றமைக்கு, மகிழ்ச்சி மிகுந்து சிவனை வணங்கித் துதித்துப் பாடுவதாகும். பண் : நட்டராகம் கலிவிருத்தம்
விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
உரை: மணம் கமழும் பொன்மலர் போன்றவனே! அதன்கண் ஊறுகின்ற செவ்விய தேனாகியவனே! நீர்க்கரையில் நிற்கும் மா, பலா, வாழை ஆகிய மூவகை மரத்துக் கனி போல்பவனே! அக்கனியின்கண் சுவைக்கப்படும் இனிமையின் விளைவாகியவனே! சிவசத்தியின் உள்ளே ஒளிரும் அருளொளியே! பெரும்பற்றப் புலியூர்க் கண்ணுள்ள அம்பலத்தாடும் அருளரசே! எனக்கு நினது திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தைத் தந்தருளினாய்! நினக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று. |
||||||||
by Swathi on 21 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|