LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

விரைவு நடை

விரைவொடு நடக்கும் மும்மையும் நான்மையும்
ஓரோவழி வருதல் உண்டென மொழிப
கருத்து : தாள நடைகளாகிய மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றுள் மும்மை நடையும், நான்மை நடையும் சிந்துப் பாடல்களில் சிலவிடங்களில் விரைவு நடையில் வருதலுண்டு என்று சொல்வார்கள்.
விளக்கம் : முன்பு சொல்லப்பட்ட நான்கு வகைத் தாளநடைகளோடு சிறுபான்மை விரைவு நடைகளும் வரும். மும்மை நடையிலும், நான்மை நடையிலும் அவை இயல்பாக நடப்பதிலும் இருமடங்கு விரைவாக நடப்பதுண்டு. அப்போது தாளத்தின் ஒவ்வோர் இடைவெளியிலும் இருமடங்கு அசைகள் நிற்கும்.
காட்டு : ஆதிதாளம் விரைவு மும்மை நடை
வா . னரங்கள் . கனிகொடுத்து .   மந்தியொடு . கொஞ் . சும் . . .
மந் . திசிந்து . கனிகளுக்கு .   வான் . கவிகள் .  கொஞ் . சும் . . .
(திருக்குற். குற. 54)
இதுவொர் அடி. இதில் எட்டு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் ஆறு அசைகள் உள்ளன. மூன்று அசை இருந்தால் ‘தகிட’ என்ற மும்மை நடை நடக்கும். இது ‘தகிட தகிட’ என்று நடக்கும் மும்மையைப் போல் இருமடங்கு விரைவாக நடப்பதால் இது விரைவு மும்மை எனப்படும். இதனை மும்மை நடையிலும் பாடலாம். அப்படிப் பாடினால் பாட்டு மெல்ல நடக்கும். குறத்தி மலைவளம் கூறி ஆடும் இப்படிச் ச ¢ல பாடலகள் விரைவு மும்மையில் நடக்கும்.
நான்மையும் இப்படி விரைவு விரைவு நடை நடப்பதுண்டு. அது ‘தகதிமி தகதிமி’ என்று நடக்கும். அது அரிதாக வரும். ‘கண்ணாயிரம்’ என்ற அண்ணாமலைச் ரெட்டியார் காவடிச் சிந்தில் காண்க. (பாடலைப் பின் இணைப்பில் பார்க்க).
      கன வயி ர . ப்   படை  அவன்மக  ளை.ப்  புணர் - என்றும்
      கழு கும லை . ப்  பதி    யனு  தின  மு.ற்  றிடு - என்றும்
வரும் சீர்களில் இந்த விரைவு நான்மை ஒலியைக் கேட்கலாம்.
விரைவு நடையை ‘இரட்டித்து ஏகல்’ என்பதும் ‘வாரநிலம் வளர்த்தல்” என்பதும் பண்டைய மரபு.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.