தென்திருப்பதி என்ற பெருமை பெற்றது. இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களை ரஷிக்க வேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார்.
சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருள உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். |