கமல் ஹாசன் இயக்கி நடித்த, விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது.
சர்வதேச தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு, கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம் கிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.
|