ஆர்.வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இது தனுஷின் 25வது படம்.
தற்போது இந்தப் படத்தில் மேலும் ஒரு புது வரவாக தனுஷுடன் கைகோர்த்திருக்கிறார் விவேக். கூடவே விவேக்கின் வலதுகையான செல் முருகனும் நடிக்கவிருக்கிறார்.
பொதுவாகவே தனுஷ் – விவேக் காமெடி காம்பினேஷன் 100 சதவீதம் காமெடிக்கு உத்தரவாதம் தரும். இதை ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்களில் இருவரும் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|