பிரிட்டனில், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஓட்டளிப்பதற்கான வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சி ஜூலை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஓட்டளிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது.
இந்நிலையில், ஓட்டளிப்பதற்கான வயது வரம்பை 16 ஆகக் குறைத்து நாடு முழுதும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர்த் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது.
|