LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

இன்னுமொரு 50 வருடங்கள்

கழித்து வாங்கியிருக்கலாம்...


அதற்குள் நாடுமுழுவதும் உள்ள

அத்தனை நதிகளையும்

இணைத்துவிட்டிருப்பான்

அந்த வெள்ளைக்காரன்,

நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!


நாடு முழுவதும் எப்போதோ

bullet rail வந்திருக்கும்,

நாம் இப்போது தான் மீட்டர்

கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!


ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த

வெள்ளைக்காரன்,

நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!


நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்

கட்டப்பட்ட ஆயிரக்கணக்

கட்டிடங்களும் பாலங்களும்

அணைகளும் அப்படியே இருக்க

முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!


நாட்டிற்கு வருமானத்தை தரும்

சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்

வெள்ளைக்காரன்!


பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே 

மாதிரியான

கல்விமுறை வந்திருக்கும்!

நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,

இடஒதுக்கீட்டுக்கும்

போராடிக்கொண்டு இருக்கிறோம்!


வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட

அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி

வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்

கொண்டிருக்கிறது,


அடித்து வாங்க சக்தியில்லாமல்

அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி 

எறிந்துகொண்டு இருக்கிறோம்!


மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்

வாங்கினோம் மக்களுக்கு வாங்க

தவறிவிட்டோம் !


120 கோடி மக்கள் தொகையில்

70 கோடி வறுமைக்கு கீழ்!

பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்

70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!


இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க

பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

எப்படி குத்திக்கொள்ளமுடியும்

கொடியை,

ஒவ்வொரு முறை குத்தும்போதும்

இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!


நம்நாட்டு பெண்களை கூட்டம்

கூடி கற்பழிக்கும் வரை,

நம்நாட்டு குழந்தைகள் தெருவில்

நின்று பிச்சைகேட்கும் வரை,

நம்நாட்டு பெண்சிசுக்கள்

கள்ளிப்பாலில் சாகும்வரை

நமக்கெல்லாம் அருகதையில்லை

சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!


ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,

அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்

மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்

என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

 

-ஜாகீர் ஹுசேன் ,ஆம் ஆத்மி கட்சி 

by Swathi   on 18 Aug 2014  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
கருத்துகள்
21-Apr-2016 04:24:54 பார்த்திபன் said : Report Abuse
அரசியல் என்பது மக்களுக்கு சாவை சையவண்டிய களம் என்பதை மறந்து அதிகாரம்(மக்களாச்சி) செய்வதற்கான களம் யன்று நினைக்கிற அரசியல் தலைவர்கள்(ஜ ஜெயலலிதா) இருக்கும் வரை இது மாறது
 
18-Aug-2015 03:54:44 மதன் said : Report Abuse
ஆம் நாம் இன்னும் அடிமைகளே காரணம் நாம் அனைவரும் watsap facebook போன்றவிகளுக்கு அடிமையாக இருப்பதால்
 
02-Jun-2015 03:18:02 ப்ரீத்தி said : Report Abuse
நல்ல கவிதை. உரைத்து விட்டது.
 
26-May-2015 22:23:53 ராஜசேகர் said : Report Abuse
நம் நாடு சுதந்திரம் அடைந்தது என்றல் அது தவறு. மோடி அவர்கள் நம் நாட்டை அண்டை நாடுகளுக்கு கூறு போட்டு வித்துட்டு வந்து கிட்டு இருக்காரு. இன்னும் 30 ஆண்டுகளில் இந்திய வல்லரசு ஆகும்னு கேட்ட அது கஷ்டம். மோடி டூர் போன எல்லா நாடும் இந்தியா ல இன்னொரு ஈஸ்ட் இந்திய கம்பெனியா இல்லாமல் இருந்தால் சரி. அப்படி ஈஸ்ட் இந்திய கம்பெனிய இருந்த நாம அடுத்த சுதந்திரத்துக்கு தயார் அக வேண்டியது தன். இந்தியால எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நம்ம நாட்ல வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர தகுதியே இல்ல. அதுக்கு குட அண்டை நாடுகிட்ட தன் பிச்சை எடுக்குறோம். இந்திய ஒரு விவசாய பூமி அப்படிங்கறத மறந்து பொருள் உற்பத்திக்கு வெளிநாட்ல இருக்குற use அண்ட் த்ரௌக் கம்பனிக்காக நிலா கையாக படுத்தும் சட்டம்..... இந்திய எப்பவும் அடிமை நாடு தன் போல.
 
08-Apr-2015 01:45:33 குமார் said : Report Abuse
நல்ல கவிதை
 
17-Mar-2015 05:23:55 கார்த்திக் said : Report Abuse
நல்ல கவிதை
 
13-Dec-2014 04:53:48 jesintha said : Report Abuse
எச்செல்லேன்ட் கவிதை. உண்மையின் உரைகால்ல இருக்கு.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.