LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இஸ்ரோவின் இன்சாட் 3டி செயற்கைக்கோள் நேற்று விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது !

ஏரியான்ஸ்பேஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள், இன்சாட் 3டி நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வானிலை ஆராய்ச்சி மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளுக்காக, இன்சாட் 3டி என்ற செயற்கைக்கோளை, வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள், பிரான்ஸ் நாட்டின் வர்த்தக பயன்பாட்டு ராக்கெட்டான, ஏரியன்ஸ்பேஸ் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் இன்சாட் 3டி செயற்கைக்கோலுடன், ஐரோப்பிய நாடுகளின், மிகப் பெரிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான, "ஆல்பாசாட்'டையும் ஏரியன்ஸ்பேஸ் ராக்கெட் சுமந்து சென்றது. விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட், 32 நிமிடங்கள், 48 வினாடிகளில், "இன்சாட் 3டி' செயற்கைக்கோளை, பூமியிலிருந்து, 36 ஆயிரம் கி.மீ.,யில் நிறுத்தியது. அடுத்த சில வினாடிகளில், இந்திய செயற்கைக்கோளில் உள்ள சூரிய ஒளி பேனல்கள் விரிந்து, மின்சாரத்தை உற்பத்தி செய்து, "இஸ்ரோ' கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்த செயற்கைக் கோளின் முழு கட்டுப்பாடும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில், அந்த செயற்கைக்கோளில் உள்ள, சுயமான உந்துசக்தியின் மூலம், மேலும் உயரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, இந்தியா மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் எல்லைகள் மற்றும் வானிலையை, "இன்சாட் 3டி' ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 26 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்
இந்திய-சீன  தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள் இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!
‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்! ‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்! முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.