LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

குடைமிளகாய் சாகுபடி ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:


நாற்றங்காலுக்கு 50 சதவீத நிழல்வலை போதுமானது. ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுக்களை குழித் தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நிரப்ப வேண்டும்.


ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் குண்டு மிளகாய் விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். 


ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தைக் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப் பாத்திகளின் மீது வைக்க வேண்டும். விதை முளைக்கும்வரை ஒரு நாளைக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். 3 சதவீத (30மிலி/லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளிக்க வேண்டும்.


விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவீத மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச்சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 35 நாட்களில் பாப்ரிகா நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்.


* கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும்.


* அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின்போது இடவேண்டும்.


* அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழு உரத்துடனும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.


* கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.


* நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


* நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின்மூலம் நனைக்க வேண்டும்.


* நடவுக்கு முன்எக்டருக்கு 1லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான புளூகுளோரலின்அல்லது பெண்டி மெத்தலின் தெளிக்க வேண்டும்.


* 35 நாட்கள் வயதான குடைமிளகாய் செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.


* 10 குடைமிளகாய் செடி வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசை 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.


* நடவு செய்த 7ம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்.


பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:


சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின்மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 மற்றும் 60ம் நாள் களையெடுக்க வேண்டும். நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் ஒரு சதவீதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100ம் நாட்களில் தெளிக்க வேண்டும். டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி. என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

பிளானோபிக்ஸ் 0.25 மிலி/லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60 மற்றும் 90ம் நாட்களில் தெளிக்க வேண்டும். நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பவேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.


நன்றி : விவசாயமலர்

by Swathi   on 20 Mar 2014  0 Comments
Tags: Kuda Milagai Cultivation   குடைமிளகாய் சாகுபடி                 
 தொடர்புடையவை-Related Articles
குடைமிளகாய் சாகுபடி ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! குடைமிளகாய் சாகுபடி ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.