LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (12 – 03 – 2017 முதல் 18 -03 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் (Cell – 99948 11158)


மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி

இந்த வாரம் விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். எனவே வீண் செலவுகளைக் குறைப்பது சேமிப்புக்கு வழிவகுக்கும். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசு வகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும்.

பரணி 

இந்த வாரம் வீட்டில் சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். வாரக் கடைசியில் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, ஞானம் பெறுவீர்கள். பயணங்களில் வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் ஏற்பட்டு அவதிப்பட நேரலாம். வணிகர்களுக்கு, தொழிலில் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களின் அயராத உழைப்பைக் கண்டு உயர்அதிகாரிகளின் பாராட்டால் மனம் மகிழும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

கார்த்திகை  1 ஆம் பாதம்

இந்த வாரம் பணவிஷயமான சிந்தனைகள் அதிகம் இருக்கும்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். பிள்ளை பாசத்தால் மன உளைச்சல் ஏற்படலாம். முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.


ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் அடைவீர்கள். சிலர் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படலாம். வங்கிக் கடன்கள் தடையின்றிக் கிடைக்கும். குழந்தைகளால்  தொல்லைகள் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம்.

ரோகிணி

இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். தந்தைவழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். இடைவிடாத பணியின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். தொழில் முதலீடுகள் இலாபம் தரும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்

இந்த வாரம் தனலாபம் அதிகரிக்கும். சிலருக்குப் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும் பெறலாம். வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதின் காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். மேல்மட்டத்திலுள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். ஆதாயம் பெருகும்.


மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்

இந்த வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். திடமான தேகமும், புத்தொளியும் பொலிவும் உண்டாகும். மனைவியை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

திருவாதிரை 

இந்த வாரம் உறவுகளுடன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். எதிர்பாராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. பெண்களின் நெடுநாள் ஆசைகள் நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எளிதாய் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

இந்த வாரம் உறவுகளின் உல்லாசப் பொழுது போக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குப் பணமுடையும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்

இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். .வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பூசம் 

இந்த வாரம் நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். காணாமல்போன பொருட்கள் சேதாரமின்றி கைக்கு வந்து சேரும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும்.

ஆயில்யம்

இந்த வாரம் மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிக ஈடுபாடு காரணமாக மனதில் அமைதி நிலவும். முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்.  மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செய்வார்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.


சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்

இந்த வாரம் திடமான தேகமும், புத்தொளியும் பொலிவும் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டுப் வாணிபத்தால் இலாபம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும்.  மனைவியை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். அரசுத் துறையில் வேலைக்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய திட்டங்களை மேற்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். சிலருக்குத் தொழிலில் மந்த நிலை உருவாவதைத் தடக்க கடின உழைப்புத் தேவை.  

பூரம்

இந்த வாரம் உங்களுக்குப் புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா எனச் செல்வதால் மனம் மகிழும்.  சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். அவர்கள் ஆசைகளும் நிறைவேறும்.

உத்திரம்- 1 பாதம்

இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நெடுநாள் ஆசைகள் நிறைவேறும். நினைத்தபடி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எளிதாய் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.


கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்

இந்த வாரம் தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். ஸ்த்ரீ சுகம், கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம்.  குழந்தைகள் தரும் தொல்லைகளால் மனவருத்தம்  ஏற்படலாம். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.

ஹஸ்தம் 

இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும்.. சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, காவல் துறையினரால் அச்சம் ஆகியவை ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மாணவர்களின் கல்விது தரம் உயரும்.

சித்திரை – 1,2 பாதங்கள்

இந்த வாரம் சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.  வியாபாரிகள் ஓரளவு இலாபம் எதிர்பார்க்கலாம்.


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள்

இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். ஆயினும், தடை, தாமத்த்திற்குப் பிறகே வெற்றி கிட்டும்.

சுவாதி

இந்த வாரம்  குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். ஆயினும், உங்கள் சாமர்த்தியத்தால் சிக்கல்களைச் சமாளித்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான  முயற்சிகள் வெற்றி பெறும்.  அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். 

விசாகம்- 1,2,3 பாதங்கள்

இந்த வாரம் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். ஞானம் மேலிடும். மனைவியின் அனுசரணையால் மனதிற்குப் பிடித்த மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். தொழிலில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். எந்தப் பணியும் இல்லாமல் பரிதவித்தவர்களுக்குப், படிப்பு, தகுதிக்கு ஏற்ப நல்ல பணி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும்


விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். பெண்களால் இலாபம் ஏற்படும். உறவுகள் துணையோடு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.  மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும்.. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

அனுஷம் 

இந்த வாரம்  பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால்  பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.

கேட்டை 

இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு மேன்மை எய்துவர்.


தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் 

இந்த வாரம் அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள்.  

பூராடம் 

இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தங்கள் தனித்திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்துவது நல்லது. சிலருக்கு  இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்.  வியாபாரிகளுக்குப் பொன்னான காலம்.

உத்திராடம் –1 ஆம் பாதம் 

இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.  புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும்.


மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்

இந்த வாரம் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  மாணவர்களுக்குத் தேர்வில் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருவோணம்

இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, உறவுகள் உதவி, தொழிலில் அபரிமிதமான இலாபம் ஆகியவை ஏற்படும்.  வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

இந்த வாரம் உயர் வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். உதவிகரமான புதிய, நல்ல நண்பர்கள் கிடைப்பர். இனிய பயணங்கள் மற்றும்  புண்ணியத் தல யாத்திரைகள் பலன் அளிக்கும். வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.


கும்பம்

(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

இந்த வாரம் ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். அதன் காரணமாக ஆதாயம் பெருகும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின்  சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர்..

சதயம்

இந்த வாரம் உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.  பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடித்துத் தொழில் முன்னேற்றமெ காண்பீர்கள்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். ஞானம் மேலிடும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிராயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.


மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

 இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அவர்களின் ஆசிகளும் துணை நிற்கும்.  தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். தொழிலில் உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம்.

உத்திரட்டாதி

இந்த வாரம் திடமான தேகமும், புத்தொளியும் பொலிவும் உண்டாகும். மனைவியை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகுதியில் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம். வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  சிலருக்கு வெளிநாட்டுப் வாணிபத்தால் இலாபம் கிடைக்கும். தொழில் நிலை உயர்வால் பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  

ரேவதி

இந்த வாரம் பல வழிகளிலும்.பணவரவு அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அதன் காரணமாகத் தங்கள் புகழ் ஓங்கும். பெண்களின் நெடுநாள் ஆசைகள் நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எளிதாய் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள்.


by Swathi   on 10 Mar 2017  0 Comments
Tags: Natchathira Palangal   Star Horoscope   Tamil Natchathira Palangal   2017 Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்   வார நட்சத்திர பலன்கள்   ராசி பாலங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.