LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (23 – 04 – 2017 முதல் 29 - 04 – 2017 வரை)

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். அதனால் அவர்களின் பெற்றோர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமாகவும், அற்புதமாகவும் இருக்கும். எல்லாம் சாதகமாகவே அமையும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும்.
பரணி
இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாவதால் மனக்குறைகள் நிலவும்..  வழக்கம் போல் எதிர்பாராத தனவரவு ஏற்படும்.  புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.  ஆயினும் அடிக்கடி பண விஷயமான சிந்தனைகள் எழும். சிலர் காவல்துறைப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம்.  செய்யும் தொழிலில் தடைகள், தந்தை வழி உறவுகளால் தொல்லை ஆகியவை ஏற்படலாம். குழந்தைகளால் அவமானமும், மனக்கலக்கமும் ஏற்படலாம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் சுபவார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள்.  ஆன்மீக வாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.  விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. சிலருக்கு தூக்கமின்மையால் சுறுசுறுபற்ற தன்மை நிலவும்.  குடும்பத்தில் அமைதியின்மையும் நிலவும். மாணவர்களுக்கு அறிவு விருத்தி ஆகும். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீர்கள். ஆனாலும், அவர்கள் தரும் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கலாம்.
ரோகிணி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அரசுத் துறைகளில் பெண் ஊழியர்களின் கை ஓங்கும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். பூஜா வழிபாடுகளாலும், பெரியோர் ஆசிகளாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். ஆபரண சேர்க்கை உண்டு. பெரியோர்களின் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். கற்பனை வளம் பெருகும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் பிரிந்த உறவுகள் ஒன்று சேருவதால் மகிழ்ச்சி ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். சிலர் கீழே விழுவதால் சிறு விபத்தைச் சந்திக்க நேரலாம். கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி தாங்கமுடியாது.
திருவாதிரை
இந்த வாரம் எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு குறையும். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தித்திறன் அதிகரித்து இலாபம் பெருகும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். சில வீட்டு விஷயங்களில் குடும்பத்தினரிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம். அந்த நேரங்களில் ஒற்றுமையே பலம் தரும்.  
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரத் துவக்கத்தில், பெரியவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பூஜா வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நல்லவர்களின் தொடர்பு இல்லையெனில் வீண் கலக்கங்கள் ஏற்படலாம். உணவு உட்கொள்ளவும்  நேரமின்றி உழைக்க வேண்டியது வரும். அப்படி உண்ணும் உணவும் வாய்க்கு ருசியாகக் கிடைக்காது. புதிய தொழில் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் பணவரவு ஏற்படும்.
பூசம்
இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான கையிருப்பு இருக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.
ஆயில்யம்
இந்த வாரத் துவக்கத்தில் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. எனவே, கோபத்தை அடக்கி அவர்களுடன் ஒத்துப் போவது நல்லது. நண்பர்களுடன் சினிமா போன்ற கேளிகைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத் தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும்.
பூரம்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள். அரசுப் பணியாளர்களிடம் அதிகாரிகள் அனுகூலமாய் நடந்து கொள்வர். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் குடும்பத்தில் மிகமிக முக்கியமான பெரியோர்களின் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். தொழில், வேலை வாய்ப்புக்கள் பிரகாசாமாய் இருக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படலாம்.  பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது  எச்சரிக்கையுடன் இருக்கவும். வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்துமே விரைவில் கிடைக்கும்  சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமையைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். பங்குச்சந்தையில் இலாபமும், போட்டி பந்தயங்களில் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். நல்ல வக்கணையான உணவு வகைகளை உட்கொள்வீர்கள். டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவீர்கள். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.
சுவாதி
இந்த வாரம் பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்கப் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும். எனவே  துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் நிம்மதி ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
அனுஷம்
இந்த வாரம் சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.
கேட்டை
இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.

தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம்  பெறுவீர்கள்.
பூராடம்
இந்த வாரம் சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். சிலருக்கு வீண்பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம்  பெறுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்திப் பெருக்கால் ஞானத் தன்மை எய்துவீர்கள். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.   மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்.

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.
திருவோணம்
இந்த வாரம்  உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். அரசுப்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம்  நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். கடின உழைப்பே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடைபெறும்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். கௌரவம், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். சமயோஜிதமாகச் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்.
சதயம்
இந்த வாரம் உறவுகள், மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும்.உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். புது வீடுகட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கலாம்.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் மனைவியை மகிழ்விக்க, புதிய ஆடைகள், ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள். கலைஞர்களுக்குச் சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கைநிறைய முன் பணம் பெற்று மகிழ்வர்.  தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனைக் கண்ட பனி போல் விலகும்,  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் சிலர் திருமணம் முடித்துப் புதிய வாழ்க்கையைத் துவங்குவார்கள். உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். இடம் சம்பந்தமான வழக்குகள் வெற்றி பெற்று, புதிய சொத்துக்கள் சேரும். அரசு மூலம் புதிய கருவிகள் வாங்கி வெளாண்மையை விரிவாக்கம் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் வாக்கு வன்மையால் பொருளாதார உயர்வு அடையும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் உங்களுக்குத் தேவையானவற்றை அடைவீர்கள்.
ரேவதி
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால், சூரியனைக் கண்ட தாமரை மலர்போல் உங்கள் முகம் பிரகாசிக்கும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். நிலுவையில் இருந்த   வழக்குகள்   நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.

by Swathi   on 19 Apr 2017  0 Comments
Tags: நட்சத்திர பலன்கள்   வார நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   நட்சத்திர ராசி பலன்கள்   Raasi Palangal   Weekly Raasi Palangal   Natchathira Palangal  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.