LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (10 – 12 – 2017 முதல் 16 -12 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம்.ஏ. (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இருக்கும் இடத்தில் நல்ல புகழும் உண்டாகும். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும்.   வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். குழந்தைகளின் சுட்டித்தனம் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும்.
பரணி
இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு. கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இலாபம் அளிக்கும்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். குடும்பத்தினர் ஒற்றுமை காரணமாக வீட்டில் அமைதி நிலவும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, புதிய தொழில் மூலமான இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். தந்தை வழி உறவுகள் உதவுவர்.
ரோகிணி
இந்த வாரம் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், ஸ்திரீகளால் மகிழ்ச்சி என ஆனந்தம்தான். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். தனலாபம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குச் சிறப்பான காலம்.  உயர் அதிகாரிகளிடம் பேசும் போது, அதிர்ந்து பேசாமல், அமைதியாகப் பேசுவது, உயர்வுக்கு வழிவகுக்கும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். இன்பம் வரும் போது மகிழ்ச்சி பொங்குவதும், துன்பம் வரும் போது துவளுவதும் தானே வாழ்க்கை. இரண்டையும் சமமாக பாவித்தால் துன்பமும் இன்பமாகும். தனவருவாய் போதுமான அளவுக்குத் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு.
திருவாதிரை
இந்த வாரம் உங்களுக்கு தந்தை வர்க்கத்தினரால் நன்மை பல ஏற்படும்  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்கு வன்மை ஓங்கும்.    சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத் திறனும் கூடும். சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கும். பணியில் கூடும் சம்பள உயர்வால், சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். சிலருக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.
பூசம்
இந்த வாரம் நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். நல்ல வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள்.
ஆயில்யம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அரசு மூலமான ஆதாயங்கள் உண்டு. மகான்களின் ஆசியும்,

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும்.
ஹஸ்தம்
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவிகள் தேடிவரும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம்  பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய சூழ்நிலை நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. ஆழம் தெரியாமல் காலை விட்டால் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். சிலருக்கு வீண்பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். மேலதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.
சுவாதி
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மனைவியின் மனம் மகிழ, மலையைக் கூட அசைத்துவிடுவீர்கள். மழலைச் செல்வங்களை, மடியில் போட்டுக் கொஞ்சும் நாள் விரைவில் வரலாம். தெய்வீகக் காரிய ஈடுபாடு, தானதரும சிந்தனைகள் ஏற்படும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம்  புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். மிகவும் பிரபலமான நபரோடு ஏற்படும் நட்பால் நன்மை பல அடைவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம்.
அனுஷம்
இந்த வாரம் செலவுகள் அதிகமாகும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பைத் தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கேட்டை
இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.   மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். போதுமான அளவு வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.
பூராடம்
இந்த வாரம் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் பூரணமாகக் கிடைத்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு அம்சங்களில் மனதைச் செலுத்துவது நல்லது. உடன் பிறப்புக்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நீண்ட நாளாகக் காத்திருந்தவர்கள் வீட்டில், மேளச்சத்தம் கேட்கும். தொழில் துறையினருக்கு பெரிய அளவில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படும் நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை..

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழில் விஷயமாக எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  
திருவோணம்
இந்த வாரம் உங்கள் பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். புதிய சொத்துச் சேர்க்கைகள் ஏற்படும். மனைவியுடன் கழிக்கும் காலங்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். கலைஞர்களின் வருமான அளவு உயரும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.  எதிரிகளின் சதித் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும்.
சதயம்
இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக இலாபங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.    வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். மனைவி,  நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்.
ரேவதி
இந்த வாரம் ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்.  குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். காரிய வெற்றியோடு, களிப்பையும் அதிகரிக்கும் நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும்  அதிகாரம் மிக்க பதவி  உயர்வு ஏற்படலாம்

by Swathi   on 09 Dec 2017  0 Comments
Tags: Madurai Abirami Sekar   Natchathira Palangal   Rasi Palangal   Weekly Rasi Palangal   நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   இந்த வார ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.