LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (23 – 10 – 2016 முதல் 29 - 10 – 2016 வரை)

ஜோதிட இமயம். அபிராமி சேகர்.

Cell:+91-9994811158

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி 
இந்த வாரம் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். அரசுப் பணியாளர்களின் அயராத உழைப்பைக் கண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டால் மனம் மகிழும். பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, ஞானம் பெறுவீர்கள். பயணங்களில் முன்பதிவுப் பிரச்சனைகள், வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் என அவதிப்பட நேரலாம். 
பரணி
இந்த வாரம் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பணவிஷயமான சிந்தனைகள் அதிகம் இருக்கும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும்.   
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு மனதில் இன்பம் பொங்கும்.. பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை அளிக்கும். நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
ரோகிணி  
இந்த வாரம் தொழில் வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபத்தின் சதவிகிதம் அதிகரிக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதின் காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும். கோபத்தால் காரியங்கள் கெடலாம். பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் கெடுபிடியால் மனக் கலக்கங்கள் ஏற்படலாம். சிலருக்குப் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும் பெறலாம்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் திருமண ஆசைகள் நிறைவேறும். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். சகோதரர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளுடன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். 
திருவாதிரை
இந்த வாரம் திருப்திகரமான பணவரவால் பொருளாதார நிலை மேம்படும். உறவுகளுடனான உல்லாசப் பொழுதுபோக்குகளால் மனதில் சந்தோஷம் நிலவும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெற்று பரிசையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக இலாபம் அதிகரித்து தாராளமான பணவரவு இருக்கும். வைத்தியச் செலவுகள் கூடலாம். 
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
இந்த வாரம் பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனம் ஆகியவற்றால் மனம் அமைதி பெறும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும். 
பூசம்
இந்த வாரம் முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்.  மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் ஏற்படும், கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். நெருங்கிய நண்பர்களுடனான தேவையற்ற பகையால் பிரச்சனைகள்  ஏற்படலாம். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
பூரம்
இந்த வாரம் நினைத்தபடி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும்.  சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால்  பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும்  வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரத் துவக்கத்தில் கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். சிலருக்குக் குழந்தைகள் தரும் தொல்லைகளால் மனவருத்தம்  ஏற்படலாம். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. பின்னர், ஈடுபடும் புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். இடமாற்றங்கள் ஏற்படலாம். 
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
இந்த வாரம் மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, காவல் துறையினரால் அச்சம் ஆகியவை ஏற்படலாம். திட்டமிடப்பட்ட பயணங்களில் முன்பதிவு கிடைக்காமல் தடைகள் ஏற்படலாம்.
ஹஸ்தம் 
இந்த வாரம்  குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். .சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும்.பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். 
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். .  சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் துவக்கத்தில் குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம். பின்னர், கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும்.  சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான  முயற்சிகள் வெற்றி பெறும்.  அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  
சுவாதி
இந்த வாரம் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.  பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். உடன்பிறப்புக்களின் தீய நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம்  உங்கள் அனைத்துப் பணிகளிலும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
அனுஷம்
இந்த வாரம் வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
கேட்டை
இந்த வாரம்  அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். நீண்ட நாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின் நட்பால் உயர்வு ஏற்படும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் 
இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். தங்கள் தனித் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்துவது நல்லது. பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணத்தால் லாபம் அதிகரிக்கும். இடமாற்றங்கள் ஏற்படலாம். 
பூராடம்
இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் அதிக இழப்பைத் தவிர்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். இல்லத்தில் அமைதி நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியது வரும். 
திருவோணம்
இந்த வாரம் உயர் வாகன வசதிகள் மேம்படும். உதவிகரமான புதிய, நல்ல நண்பர்கள் கிடைப்பர். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். எழுத்துத் தொழிலில் வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவால் விரிசல்கள் ஏற்படலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின்         உதவிகள் கை கொடுக்கும்.  வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின்  சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
சதயம்
இந்த வாரம் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அரசு உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.  பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். தொழிலில் முழு வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும்.  வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும்.
ரேவதி
இந்த வாரம் விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.

by Swathi   on 20 Oct 2016  0 Comments
Tags: நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   வார நட்சத்திர பலன்கள்   வார ராசி பலன்கள்   அபிராமி சேகர்   Star Predictions   Natchathira Palangal  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.