|
||||||||
நட்சத்திர வார பலன்கள். 29 – 01 – 2017 முதல் 04 - 02 – 2017 வரை |
||||||||
ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ. ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ. 99948 11158
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி -- இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களிடம் ஏற்படும் புதிய நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். வாழ்க்கையின் முன்னேற்றங்களில் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும். மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
பரணி -- இந்த வாரம் புதிய முயற்சிகளாலும், தனவரவு அதிகரிப்பதாலும், கேளிக்கைகளில் ஈடுபடுதல், இனிய பயணங்கள் என எல்லாமே நன்மையாகவே நடக்கும். வியாபரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். உயர் அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்புத் தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிக்கரித்து மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனமும் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் தனித்திறமைகளால் புதிய இலக்குகளை எட்டி அதிக இன்சென்டிவும், பாராட்டும் பெறுவர். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்திமயமாகக் கழியும். ரிஷபம் ( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் ) கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து இலக்கை எட்டுவீர்கள். காவல்துறைப் பணியாளர்கள் பல சாகஸங்களை நிகழ்த்துவர். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மனக்கசப்புக்களைத் தவிர்க்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களால் ஆதாயம் அதிகரிக்கும். மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். ரோகிணி – இந்த வாரம் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் இருக்கும். வாக்குவன்மையால் பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசு அதிகாரிகளால் சிலருக்கு நன்மைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் உங்கள் குடும்பத்தாரிடையே ஒற்றுமை ஓங்கும். மகிழ்ச்சிகரமான தருணங்களால் மனதில் சந்தோஷம் நிலவும். விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். எந்த காரியத்தையும் ஒத்திப் போடாமல் ஒன்று செய்தாலும் இன்றே செய்வது வெற்றி அளிக்கும். நீங்கள் அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். அவசரப் பணி காரணமாக திடீர் பயணங்கள் மேற் கொள்ள நேரலாம்.
திருவாதிரை --- இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபத்தை அதிகரிப்பீர்கள். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். உயர்திகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் உங்களுக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி என அனைத்தும் கை கூடிவரும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும். கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலை தூர சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்துடன் ஜாலியாகப் பொழுது போக்குவதற்கான செலவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். வீணான கோபத்தை அடக்கிக் குடும்பத்தாருடன் ஒத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். வாழ்க்கையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
பூசம் -- இந்த வாரம் உங்களுக்கு இறை சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும். ஆயில்யம் – இந்த வாரம் உங்கள் செயல்பாடுகளில் புதிய உத்வேகமும், உற்சாகமும் ஏற்படும். நீங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அனுகூலமாய் முடியும். தொடர் முயற்சி காரணமாக, வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். எனவே துன்பம் வரும் போது துவளாமல் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான வந்து சேரும். சிம்மம் ( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் – இந்த வாரம் உங்களுக்கு நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். பூரம் – இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். கன்னி ( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும. ஹஸ்தம் – இந்த வாரம் நீங்கள் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். எல்லாவகையிலும் சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். பரிசுப் பொருட்களை அறிவித்து வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். துலாம் ( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
சுவாதி – இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். வியாபரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்புத் தரும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் தனவரவு அதிகரிப்பதால், கேளிக்கைகளில் ஈடுபடுதல், இனிய பயணங்கள் என எல்லாமே நன்மையாகவே நடக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெண்களுடனான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் எப்போதும் போல் ஒரே சீராக இருப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். விருச்சிகம் ( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். பெண்களுக்குப் பணியிடத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். அனுஷம் – இந்த வாரம் தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
கேட்டை – இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். மிகப் பெரிய சாதனைகள் புரிந்து புகழ் அடைவீர்கள். தனுசு ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் – இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். உழைத்தால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். பூராடம் – இந்த வாரம் உங்கள் சமயோஜித புத்தியால் ஆதாயம் அடைவீர்கள். மனதில் மகிழ்ச்சி பெருகும் விதத்தில் அன்றாட வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். அதிக மதிப்பெண்கள் பெற இயலும். கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும். அன்பாகத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மகரம் ( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் ) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். திருவோணம்- இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். செலவுகளைக் குறைத்துப் பணத்தைச் சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளின் எதிர்பார்ப்புப்படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். கும்பம் ( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும்.
சதயம்- இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.. பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மீனம் ( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆயினும், எதிர்பார்த்த இனங்களில் எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். உத்திரட்டாதி- இந்த வாரம் தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்.
ரேவதி- இந்த வாரம் நல்லவர்களுடனான தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும். குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள் முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்..
|
||||||||
by Swathi on 28 Jan 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|