LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (02 – 04 – 2017 முதல் 08 - 04 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ. (99948 11158)


மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி

இந்த வாரம் மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்த்தியாக உடையணிந்து, விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தக்க வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம்.

பரணி 

இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம். சிலர் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கார்த்திகை  1 ஆம் பாதம்

இந்த வாரம் வராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் கெடுபிடிகள் ஏற்படலாம். புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் அவமானங்களும், தொல்லைகளும் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உறவுகளுடன் ஒற்றுமை ஓங்கும். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.


ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து ஏற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ரோகிணி 

இந்த வாரம் பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். பிறரிடம் கோபத்தால், துர்வார்த்தைகளைப் பேசாதிருப்பது நல்லது, சகோதரர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்

இந்த வாரம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளைப் பிரிந்து வாழ நேரிடலாம். பெண்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை அளிக்கும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம். மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும்.


மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்

இந்த வாரம் குடும்பத்தினரின் உல்லாசப் பொழுதுபோக்குகளாலும் விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக உணவின் மீதும் வெறுப்பு ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.

திருவாதிரை

இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

இந்த வாரம் நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். புண்ணிய கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  காணாமல்போன பொருட்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்

இந்த வாரம் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே,  ஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். 

பூசம் 

இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும்.  தூரதேசத்தில் இருந்து வரும் நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் நண்பர்கள் பகையால் மனக் கலக்கம் ஏற்படலாம். ஆயினும், நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது.

ஆயில்யம்

இந்த வாரம் வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதா கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.


சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் 

இந்த வாரத் புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக் கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். வியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.

பூரம்

இந்த வாரம் மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை மழையில் நனைவீர்கள்.

உத்திரம்- 1 பாதம்

இந்த வாரம் ஈடுபடும் புதிய முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். ஸ்த்ரீ சுகம், கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். குழந்தைச் செல்வங்களால் மனக்கலக்கம் மற்றும் அவமானம் ஏற்படலாம். பின்னர், தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும்.


கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்

இந்த வாரம் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும்.  குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். கல்வியில் தேர்ச்சியும், தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். ஆரோக்கிய பாதிப்பு, காவல் துறையினரால் அச்சம் ஆகியவை ஏற்படலாம்.

ஹஸ்தம்

இந்த வாரம் இனிய வாரம். புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். குடும்பத்தில் பாசப் போராட்டங்கள் ஏற்படலாம். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

சித்திரை – 1,2 பாதங்கள்

இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும், பயணம், அரசு சம்பந்தமான வேலைகள் மற்றும் தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் சிரமத்திற்குப் பின் கிடைக்கும். அரசு உதவியுடன் பணவரவு இருக்கும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் 

இந்த வாரம் இனிய வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். பிள்ளைப் பேறு, தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும்.

சுவாதி

இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். ஆயினும், எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விசாகம்- 1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். பின்வரும் நாட்களில் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்.  தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.


விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

இந்த வாரம்  தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். மனைவியின் கருத்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தால் இல்லத்தில் இன்பம் பொங்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும்.

அனுஷம்

இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெரியோர் வாக்குகளைக் கேட்பதால் ஞானத்தன்மை அடைவீர்கள். நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது.

கேட்டை

இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சுலபமாக சிக்கல்களைச் சமாளிக்கலாம். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும்.  நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்த்தால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.


தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்

இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும்.  பூஜை, புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு மனைவியின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.

பூராடம்

இந்த வாரம் சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை அடையும் வாய்ப்பு பிரகாசமாக அமையும். புத்திர பாக்கியம், விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிவுடன் நடக்கும் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்

இந்த வாரம் இனிய பயணங்கள் மற்றும்  புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். சிலருக்கு உறவுகளிடையே ஒற்றுமை குறைவால் விரிசல்கள் ஏற்படலாம். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானமாகப் போவது நல்லது. விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும்.


மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்

இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். 

திருவோணம்

இந்த வாரம் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். திட்டமிடப்பட்ட பயணங்களில் தடைகள் ஏற்படலாம். பிறரைக் கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்.  கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேக சுகம் குறையும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்கு  அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்.


கும்பம்

(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். தனலாபம் தாராளமாய் இருக்கும். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். சிலருக்கு, புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும். பணியாளர்களின் கடின உழைப்பால் அவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் இருக்காது.

சதயம்

இந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். மனதில் ஏற்பட்ட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குறித்த நேரத்திற்குத் தரமான உணவுண்ணும் பாக்கியம் பெறுவீர்கள். பால்ய நண்பரின் வரவால் உள்ளம் மகிழ்வீர்கள். அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் ஞானம் மேலிடும். பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். . இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். உங்கள் பேரும் புகழும் கூடும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். அரசு உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.


மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இறைவழிபாட்டால் இன்பமும் அமைதியும் சேரும். ஆயினும், மனதில் ஏதோவொருவித பயம் நிலவும். மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாயார் வகையில் இலாபமும், கற்பனை வளமும் பெருகும். சிலருக்குச் சுறுசுறுப்பற்ற நிலையாலும், மந்த புத்தியாலும் காரியத்தடைகள் ஏற்படலாம்.

உத்திரட்டாதி

இந்த வாரம் உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணைய தளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். . பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். 

ரேவதி

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.   கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.. பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர்.

by Swathi   on 01 Apr 2017  0 Comments
Tags: Rasi Palangal   Natchathira Rasi Palangal   27 Natchathiram Palangal   நட்சத்திர வார பலன்கள்   வார ராசி பலன்கள்   நட்சத்திர பலன்கள்   27 நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.