LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா?

நம் நாட்டு பெண்கள், நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைப்பது மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுகிறன. மேலும் இது ஒரு இறை வழிபாட்டின் அங்கம்மாக கருதப்படுகின்றன. 

 

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றிப் பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் எனக்குறிப்பிடுகிறது. இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிபடுத்துகிறது. அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை.அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது.

 

நெற்றியில் திலகத்தை வைத்துக்கொள்ளும்போது, நான் கடவுளை எப்போதும் மனத்தில் நிலை நிறுத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, “ஸ்ரீயை நமஹ’ என்றோ, “மகாலட்சுமியே போற்றி’ என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும்.

by Swathi   on 04 Aug 2013  1 Comments
Tags: பெண்கள்   நெற்றி   பொட்டு   குங்குமம்   பெண்கள் நெற்றி   சிவப்பு குங்குமம்   Applying Kungumam  
 தொடர்புடையவை-Related Articles
பெண்களின் நன்மைக்கு பெண்களின் நன்மைக்கு
பெண்களைப் போற்றிய கலாச்சாரம்… பெண்களைப் போற்றிய கலாச்சாரம்…
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா?
நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் பூசுவதன் மருத்துவ பயன்கள் ! நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் பூசுவதன் மருத்துவ பயன்கள் !
மகளிர் தினம் ! மகளிர் தினம் !
கருத்துகள்
02-Nov-2013 02:36:01 நந்தனன் said : Report Abuse
இரண்டு புருவங்கள் சற்று மேல் பொட்டு கண்டிப்பாக வைத்து வேண்டும். தமயந்தி நளன் வாழ்க்கையில் ஏற்பட எல்லா துயர்களும் தமயந்தி தன் நெற்றியில் பொட்டை புருவங்கள் தற்கால பெண்கள் போல் பொட்டு வைத்து கொண்டது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.