மழைக்கலாம் வந்தாலே கொசுக்களின் சீசன் துவங்கி விடுகிறது. கொசுக்கள் பொதுவாக இருட்டையும், அடர் நிறங்களையுமே விரும்புவதாகவும், வெண்மை நிறத்தை வெறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கொசுக்கள் அதிகம் வர சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் வெள்ளை நிற பெயிண்டுகள், விரிப்புகள் பயன்படுத்தலாம். மனித உடலில் துர்நாற்றம் இல்லாதவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதில்லை. மழைக்காலத்தில் காலை 03.30 முதல் 06.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை கொசுக்களின் நேரம். இந்த நேரத்தில் ஜன்னல்கள், கதவுகளை அடைத்து விட்டால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். கொசுக்களை விரட்டும் கிரீம், சாதனங்களை விட, வெள்ளை நிற கொசு வலைகளே நல்லது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
|