|
|||||
இணைய உலகில் ஒரு நிமிடத்தில் என்னென்னவெல்லாம் நடக்கிறது !! ஒரு ஆச்சர்ய தகவல் !!! |
|||||
![]() ஒரு நிமிடத்தில் இணைய உலகில் என்னவெல்லாம் நடக்கிறது? மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன, ட்விட்டரில் ட்வீட்கள் பதியப்படுகின்றன, பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களும், புகைப்படங்களும் பகிரப்படுகிறது. பல தளங்களில் சாட் என்னும் உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றன, மியூசிக் பைல்கள் டவுண்லோட் ஆகின்றன, கேம்ஸ் டவுண்லோட் ஆவதுடன், ஆன்லைனிலேயே விளையாடப்படுகின்றன, பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன, பலர் நுழைகின்றனர், சிலர் வெளியேறுகின்றார்கள், எவ்வளவோ பேர் தங்கள் பொருட்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். எவ்வளவோ அளவில் பணம் பரிமாறப்படுகிறது. இப்படி வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களும் இணையத்தில் மேற்க்கொள்ளப்படுகின்றன.
ஒரு நிமிட நேரத்தில், இணைய உலகில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலை தேடிய இன்டெல் நிறுவனம், பல ஆச்சரியப்படத்தக்க தகவல்களை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.
உதாரணத்திற்கு, பேஸ்புக்கில், ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் லாகின் செய்கிறார்கள்? என்று உங்களிடம் கேட்டால், என்ன சொல்வீர்கள், பத்தாயிரம், ஒரு லட்சம் ....அதற்கு மேல் இருக்காது என்று சாதிப்பீர்கள். அதுதான் இல்லை. அண்மையில் இதனைக் கணக்கெடுத்த இன்டெல் நிறுவனம், பேஸ்புக்கில், ஒரு நிமிடத்தில் 2 லட்சம் 77 ஆயிரம் பேர் லாக் இன் செய்வதாகக் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய இணைய ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இதோ அவற்றை இங்கே காணலாம். நினைவில் கொள்ளுங்கள். கீழே தரப்படுபவை எல்லாம், ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடப்பவை.
இணையத்தில் இணைந்துள்ள சாதனங்களின் எண்ணிக்கை உலக மக்களின் தொகைக்கு இணையாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை உலக மக்களின் தொகையை போல் இரண்டு மடங்காக இருக்கும்.
கூகுள் தேடல் சாதனத்தில், 20 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 60 வினாடிகளில், 72 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ படங்கள், யூ ட்யூப் தளத்தில் அப்லோட் செய்யப்படுகின்றன.
20 கோடியே 40 லட்சத்திற்கும் மேலான மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.
70 புதிய தளப் பெயர்கள் பதியப்படுகின்றன. 571 புதிய இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.
உலக அளவில் இணையம் வழியே 6 லட்சத்து 39 ஆயிரத்து 800 ஜிபி அளவிலான டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
அமேசான் வர்த்தக இணையதளத்தில், ஒரு நிமிடத்தில் 83 ஆயிரம் டாலர் அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
ப்ளிக்கர் தளத்தில் 3000 படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. இரண்டு கோடி போட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.
பேஸ்புக்கில் 60 லட்சம் பேர் பார்வையிட்டு கருத்து தெரிவிகின்றனர். 18 லட்சம் பேர் லைக் கிளிக் செய்கின்றனர். லிங்க்டு இன் தளத்தில் 100 க்கும் மேலான புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன.
விக்கிபீடியாவில், 6 க்கும் மேலான புதிய கட்டுரைகள் அப்லோட் செய்யப்பட்டு பதிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிகேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.
தங்களுடைய பெர்சனல் தகவல்களை, நிமிடத்திற்கு 20 பேர் திருடு கொடுக்கின்றனர். |
|||||
by Swathi on 01 Oct 2013 1 Comments | |||||
Tags: இணையம் ஒரு நிமிடம் One Minute Internet | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|