நமக்கு அறுகம்புல் சாற்றின் மகத்துவம் குறித்து எழுதப்பட்டிருக்கும் அளவுக்கு கோதுமைப் புல்லின் அதிசய மருத்துவ குணம் பற்றி எவரும் அதிகம் எழுதியதாகத் தெரியவில்லை. கோதுமைப் புல் வைத்தியத்தால் குணமாகும் வியாதிகளின் பட்டியலைப் பார்த்தால் அநேகமாக முக்கால்வாசி மருத்துவர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும் போல் இருக்கிறது ! மருத்துவர் ஆன் விக்மோர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவர் சொந்தமாகத் தானே நடத்தும் சானடோரியத்தில் அமெரிக்கர்களின் பல்வேறு வியாதிகளை கோதுமைப் புல் வைத்தியத்தால் குணப்படுத்தியிருக்கிறாராம்! கோதுமைப் புல்லால் குணமாகும் வியாதிகளின் லிஸ்ட்டைப் பார்க்கிறீர்களா? இருதயம், ரத்த சம்பந்தமான நோய்கள், மூச்சுத் தொடர்பான வியாதிகள், ஜீரண உறுப்புகள், பற்கள், மூட்டுகள், மூளை, நரம்பு, தோல், காது , ஜனன உறுப்புகள், சிறுநீரகங்கள் இவை தொடர்பான நோய்கள், குறைபாடுகள் ஆகியவற்றை குணப்படுத்துகிறதாம். பொதுவாய் சர்வரோக நிவாரணி! ரத்தப் புற்று நோய் வந்து மற்ற மருத்துவர்கள் அனைவரும் கை விட்ட பின் சாகும் தருவாயிலிருந்த தன கணவரை மருத்துவர் விக்மோரியிடம் அழைத்து வந்து ஒரு பெண்மணி விடாப் பிடியாய் கோதுமைப் புல் மருத்துவம் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள். மருத்துவருக்கே அவருக்குச் சிகிச்சை அளிப்பதில் இல்லையாம். வெறுமே கோதுமைப் புல் எப்படிப் பயிரிடுவது அதை எப்படி வெட்டி எப்படி சாறு எடுத்துப் பருகுவது என்று மட்டும் விளக்கமளித்து விட்டு அனுப்பிவிட்டாராம். இது நடந்தது. 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரியாய் மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 19-ம் தேதி 1971-ம் ஆண்டு ஜம்மென்று காரில் வந்திறங்கிய மத்திய வயது ஆசாமி துள்ளல் நடையுடன் வந்து மருத்துவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். மருத்துவருக்கு அவரை அடையாளமே தெரியவில்லை. பின்பு 1970-ல் தன் மனைவியுடன் அவரை வந்து பார்த்த கதையைச் சொல்லி தானே வீட்டில் கோதுமைப் புல் வளர்த்து, அதன் சாறு பருகியதில் அவரது ரத்தப் புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டதாய் மருத்துவ சான்றுகளைக் காண்பித்திருக்கிறார். இதைக் கேட்டு மருத்துவருக்கே வியாப்பம்! இப்படிப் பல கேஸ் ஹிஸ்டரிகள் .. அவற்றைப் படிக்கும் போது நமக்கு பெரும் வியப்பு.. இப்படி ஒரு பெரிய வைத்தியம் இருப்பதே தெரியாமல் போயிற்றே என்று !! சரி அப்படி இந்தக் கோதுமைப் புல்லில் என்னதான் இருக்கிறது? கோதுமைப் புல்லின் அடிப்படை மூலக்கூறே அதனுடைய குளோரோபில் எனப்படும் இலை , தலை, தண்டுகளில் பசுமையூட்டும் செடி, கொடிகளிலும் குளோரோபில் இருக்கிறது என்றாலும் கோதுமைப் புல்லில் இருப்பது ஒரு தனி சிறப்பு தான் ! நம் மனித ரத்தத்தின் ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கும். ஹெமின் என்ற பொருளும் கோதுமைப் புல்லின் குலோரோபிலும் ஏறத்தாழ ஒரே அணுத் திரன்மக் கட்டமைப்பில் இருக்கின்றனவாம். இன்னும் சற்று அறிவியல் ரீதியாக விளக்கினால் இரண்டும் பெருமளவு ஒத்தே இருக்கின்றன. நமது ரத்தம் காரத்தன்மை (அல்கலின்) உடையது. கோதுமைப் புல் சாற்றின் தன்மையும் அதுவே. ரத்தத்தின் ஹைட்ரஜன் மூலக்கூறு எண் (pH) 7.4 தான். எனவேதான் இதைக் குடித்தவுடன் ரத்தத்தில் சடக்கென்று சேர்ந்து கொண்டு விடுகிறது. மிக வேகமாக, எளிதாக அதிலுள்ள வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் கிரகிக்கப்பட்டு விடுகின்றன. இதில் அடங்கியுள்ள உயர் அளவு குளோரோபில் ரத்தத்தில் உள்ள நோய் நுண்மங்களை எளிதில் அளிக்க வல்லது. ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி வெளியே தள்ளுகிறது. இதனால் விஷயமறிந்த மருத்துவர்கள் கோதுமைப் புல்லின் சாற்றைப் பச்சை ரத்தம் என்றே அழைக்கிறார்கள். தினமும் இந்தச் சாற்றைப் பருகி வந்தால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணிக்கப்படுகிறது. உடலில் உள் உறுப்புகளில் இருக்கும் அனைத்துக் கசடுகளையும் இது உருட்டித் திரட்டி வெளியே அனுப்பி விடுவதால் ஜம்மென்னு ஒரு வாட்டர் வாஷ் செய்தது போல் உடல் புத்துணர்ச்சியால் உற்சாகமாகச் செயல் படுகிறது. கோதுமைப் புல்லில் அநேகமாக எல்லாத் தாதுப் பொருள்களுமே இருக்கின்றனவாம். இதிலிருக்கும் மாக்னிஷியம் ஏறத்தாழச் செரிமானத்திற்கு உதவும் 30 என்சைம்களை உசுப்பி விடுகிறதாம். வைட்டமின் டி, வைட்டமின் பி 12 தவிர அநேகமாக எல்லா வைட்டமின்களும் இதில் இருக்கின்றனவாம். இதிலிருக்கும் ஈ, ஏ, சி வைட்டமின்கள் செற்கள் கிழடு தட்டிப் போவதைத் தடுக்கின்றன. இதிலுள்ள குலோரோபில்லில் இருக்கும் உயிருள்ள என்சைம்கள் உடலில் புற்று நோய் செற்களை அழிக்கவல்லவள்ளவையாம்! இதிலுள்ள வைட்டமின் ஈ இருதயம், ரத்தக் குழாய்கள் ஆகியவற்றிற்கு மிக நன்மை பயக்க வல்லவை. இதில் உள்ள வைட்டமின் B 17 (Laetrile) புற்று நோயைக் குணப்படுத்தும் ஒரே வைட்டமினாம். ஏறத்தாழ 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்கக் கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் பெற்று விடலமாம்! கோதுமைப் புல்லை நாம் வீட்டிலேயே வளர்க்கலாம். அதற்குத் தேவை ஏழு செடிகளை நாடும் தொட்டிகள், நாள் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் ஏழு நாளைக்குத் தேவையான நல்ல கோதுமை 700 கிராம் + பொறுமை ! ஒரு சதுர அடித் தொட்டி 3 அங்குலம் ஆழம் உடையதாய் இருந்தால் போதும். தொட்டிகலீல் முக்கால் பங்கு மான்களை நிரப்பி சற்று நீர் தெளித்து நேரடியாய் சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வீட்டுப் பால்கனிகளில், புழக்கடைப் பக்கம் வைத்துக் கொள்ளலாம். முதலில் 100 கி. கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில் ஊறப் போட்டுவிட வேண்டும். பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக முடிந்து தொங்க விட்டு விடுங்கள். இந்த நிலையில் மேலும் ஒரு 12 மணி நேரம் இருக்க வேண்டும். அந்த நிலையில் கோதுமை முளைக் கட்டி விடும். முதல் தொட்டியில் இந்த முளைக் கட்டிய கோதுமையை லேசாக விதைத்து மேலே மண்ணால் மூடி போல் அடுத்தடுத்த நாட்களில் முளைக் கட்டிய கோதுமையை இரண்டாவது, மூன்றாவது என்று ஏழு தொட்டிகளிலும் விதைத்து விடவும். தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை, மாலை இருவேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும். எட்டாவது நாளன்று பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப் புல் ஐந்து அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும். புல்லை ஒரேடியாகப் பிடுங்கி விடாமல் சிறிது விட்டு மீதிப் புல்லை ஒரு கத்தரிக் கோலால் வெட்டி எடுக்கவும். 100 கிராம் கோதுமை விதைத்துக் கிடைக்கும் புல்லில் நான்கு அல்லது ஆறு அவுன்ஸ் சாறு கிடைக்கும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு இந்த அளவு சாறு போதுமானது! கோதுமைப் புல்லை ஐந்து அங்குலத்திற்கு மேல் வளர விட்டால் அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரோபில்லின் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும் !! வெட்டிய புல்லை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத் தொடுத்து வடிகட்டி எடுத்தால் பசுமையான நிறத்தில் வீட் கிராஸ் ஜூஸ் மணக்கும்! லேசாய்ச் சர்க்கரை கலந்தோ அல்லது வேறு பழச் சாறுகளில் இதைக் கலந்தோ குடிக்கலாம். காலை, மாலை இருவேளைகளிலும் பகிர்ந்து இதைக் குடிக்கலாம். பின்பு அடுத்தடுத்த நாட்களில் இதே பார்முலா தான் ! எட்டு நாளைக்குப் பிறகு மீண்டும் முதல் தொட்டியிலிருந்து கோதுமைப் புல் அறுவடையைத் தொடங்கலாம். கொஞ்ச காலத்திற்குப் பிறகு புல்லின் வளர்ச்சி குறையலாம். அப்போது இருப்பவற்றை வேரோடு பிடுங்கித் தூக்கி எரிந்து விட்டு மீண்டும் முன்போல் கோதுமை முளை கட்டிப் பயிர் செய்யலாம். மருத்துவர் விக்மோர் வீட் கிராஸ் தெரப்பிக்குக் குறைந்தபட்சம் 21 நாள் சாப்பிட்டுப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறார். எடுத்த எடுப்பில் ஜூஸ் அத்தனையையும் குடிக்கக் கூடாது. முதலில் 50 மி.லி சாப்பிடலாம். முதலிலேயே அதிக டோசேஜ் குடித்தால் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. வாந்தி வரலாம். சளி பிடிக்கலாம். ஜுரம் வரலாம். பேதியாகலாம். இதனால் பீதி அடையக்கூடாது. சாப்பிடுவதை சில நாள் நிறுத்தி விட்டு அந்த உபாதைகள் அடங்கியதும் மீண்டும் ஆரம்பிக்கலாம். 10 அல்லது 15 நாட்கள் 50 மி.லி குடித்துப் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு 100, 150 மி.லி என்று டோசேஜைக் கூட்டிக் கொள்ளலாம். முக்கியமான இரண்டு விஷயங்கள் : ஒன்று - ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் பருகக் கூடாது.இரண்டு - முளைக் கட்டிய கோதுமை விதைக்கும் போது மண்ணிற்கு கெமிக்கல் உரம் எதையும் பயன்படுத்தலாகாது. பசுஞ்சாணி உரமே சிறந்தது. - சிவ தனுஷ்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |