|
|||||
கோதுமை கேசரி |
|||||
தேவையானவை : கோதுமை ரவை - 1 கப் சீனி - 1 கப் முந்திரி பருப்பு - 6 பாதாம் பருப்பு - 6 கிஸ்மிஸ் பழம் -6 நெய் - 4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை பால் - 1 1 /2கப் சூடான தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை : 1.முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். 2.ஒருகடாயில் முன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை ரவை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும். 3.பிறகுஒரு பாத்திரத்தில்பால் மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்கவைக்கவும் 4.தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, கோதுமை ரவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவேண்டும். 5.மேலே 3 டீஸ்பூன் நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும். 6.கோதுமைரவை கலவை நன்றாக வெந்ததும் சக்கரை உப்பு ஏலக்காய்தூள் போட்டு கிளறி விடவும். 7.வறுத்து வைத்திருக்கும் முந்திரி பாதாம் கிஸ்மிஸ் பழம் கேசரியில் போட்டு கிளறி விடவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|