வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்து வரும் படம் அனேகன். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். படத்தின் டீஸரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அனேகன் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, அனேகன் படம் ஜனவரியில் பொங்கல் ரிலீஸாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, கமலின் ‘உத்தம வில்லன்’, மற்றும் விஷாலின் ‘ஆம்பள’ படங்களும் வெளியாக உள்ளன. இந்தப் பட்டியலில் ‘அனேகன்’ படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|