LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் கால் ஷீட் கொடுத்தால்.. எப்பவேண்டுமானாலும் படத்தை தயாரிக்க நான் ரெடி... சொல்கிறார் உதயநிதி !!

விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி படம் 100 நாட்கள் ஓடி உதயநிதிக்கு ஒரு நல்ல வசூலையும், பெயரையும் பெற்றுத்தந்தது.

முதலில் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி, ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது நன்பேண்டா, இதயம் முரளி, திருக்குமரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தமிழ் சினிமாவுக்கு வந்து 23  ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடன் நடித்த நடிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

விஜய்யை வைத்து மீண்டும் எப்போது படம் தயாரிக்க போகிறீர்கள் என்று உதயநிதியிடம் கேட்டதற்கு, "விஜய் எப்போது தேதி தருகிறாரோ அப்போது படம் தயாரிப்பேன். நாளையே தேதி தந்தாலும் படம் தயாரிக்க நான் தயார்," என்றார்.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்திற்குப் பிறகு அட்லி படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு தான் அவர் உதயநிதிக்கு கால்ஷீட் தரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay
by Swathi   on 08 Dec 2014  0 Comments
Tags: Vijay   Udhaya Nidhi Stalin   Udhayanidhi Stalin Produce   Kuruvi   உதயநிதி   விஜய்   குருவி  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.