LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?

58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?

          உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியானது போதிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியிலும் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963ல் தொடங்கப்பட்டது. தமிழால் ஈர்க்கப்பட்டு அதைப் பயின்று, தமிழ் அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மானியர் இதனை நிறுவினார். தற்போது முனைவர் பட்டத்துக்கான 5 படிப்புகள் உட்பட தமிழில் இளங்கலை படிப்புகளிலும் இங்கு மாணவர்கள் பயில்கின்றனர்.

          இடையில் இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்துக்கு வெளியே உள்ள 2 பெரிய நூலகங்களில் சிகாகோவுடன் கொலோனும் ஒன்றாக உள்ளது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாக முடிவின்படி, தமிழ் பிரிவின் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020ல் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் தமிழ் இருக்கைகளில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர்கள் அதைத் தடுக்க முயன்றனர். அமெரிக்கவாழ் இ.ந்தியர்களான அவர்கள் 2018ல் திரட்டி பல்கலைக்கழகத்துக்கு அளித்த நிதியால், மூடும் முடிவு ஜூன் 2022 வரை தள்ளி வைக்கப்பட்டது. பேராசிரியர் உல்ரிக்கின் ஓய்வுக்க பிறகும் பாதி வேலைநேரத்துடன் தற்காலிகமாக அவரது பணியை நீட்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வெட்டர் மான் எனும் ஜெர்மானியர் நிரந்தரப் பணியில் தொடர்ந்தார்.

          இதன் மற்றொரு பாதித் தொகையான ரூ.1 கோடியே 24 லட்சத்தை தமிழக அரசு அளிப்பதாக 2019ல் கூறியது. ஆனால் கரோனா பரவலால் உருவான நிதிப் பற்றாக்குறையால் அந்தத் தொகை அளிக்க முடியாமல் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது. எனவே, வரும் மார்ச் 31ம் தேதியுடன் உதவிப் பேராசிரியர் வெட்டர் மானை பணிநீக்கம் செய்து தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை மூடுவதிலிருந்து காப்பாற்ற ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள், ‘ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பைத் தொடங்கி 12 நாட்டினருடன் இணைந்துள்ளனர்.

          தற்போது, கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவை காக்க தேவைப்படும் 1,37,50 ஈரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 24 லட்சம் ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் திரட்டப்படுகிறது. ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் ஹெடில்பர்க் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்க் கல்வி மற்றும் ஆய்வுக்கானப் பிரிவுகள் செயல்படுகின்றன. இதில் ஹெடில்பர்க் பல்கலைக்கழகத்திலும் கொலோனை போன்ற ஒரு சிக்கல் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

by Lakshmi G   on 28 Mar 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம் நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம்
என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,ஐநா இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,ஐநா இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.