|
||||||||
யார் அரசியல்வாதிகள் |
||||||||
யார் அரசியல்வாதி?
வோட்டிற்கு காசு வாங்கும் நாமா இல்லய் பதவிக்கு வந்த பிறகு நம்மிடம் லஞ்சம் வாங்குபவர்களா? யார்
லஞ்சம் வாங்குவது சரியா?
வோட்டிற்கு காசு வாங்கும் நாம் நல்லவராகலா இல்லய் பதவிக்கு வந்த பிறகு நம்மிடம் லஞ்சம் வாங்குபவர்களா இரண்டுமே தப்பு தான ... தப்ப நம்ம செஞ்சிட்டு பலிய்ய இனொருவன் மேல போடுவது சரியா...நம்ம கிட்ட குடுத்த காச அவன் திருப்பி வாங்கிரம் அது லஞ்சம் என்று சொன்ன நம்ம வாங்கிறதும் லஞ்சம் தான் .அவன் குடுக்கிற காசு ல நம்ம வாழ்க்கை ஒன்னும் மாறப்போவது இல்லையே...இதுவே நம்ம வாங்காம விட்டோம் என்றால் குடுபவர்களுக்கே பயம் வரும் ..நம் மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்று.நாம் என்றும் முட்டாள் இல்லை நம்மை முட்டாள் ஆகா மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் .மாறுவதும் மாறாததும் நம் கையில் தான் உள்ளது..
அரசியல் ஒரு தொழில்?
நம்முள் சிலர் அரசியல் பிடிக்காது அதற்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லய் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்....இது அவர்களுக்கு...
அரசியல் ஒரு தொழிலோ விளையாட்டோ இல்லை , நம் நாட்டை மற்றும் நம்மை காப்பாத்துவதற்கான ஒரு வழிகாட்டி .பணம் என்ற சொல்லை அரசியலில் புகுத்தி நாம் அதை ஒரு தொழிலாக மாற்றிவிட்டோம் .நம்மக்கு வரப்போகும் தேர்தல் என்னவென்று அறியாமல் சிலர் இருக்கிறாரகள் . நம் மக்களுக்கு தெரிந்த இரண்டே கட்சி ஒன்னு அம்மா கட்சி இனொன்று ஐயா கட்சி..இந்த ஆட்சி இல்லை என்றல் இனொன்று ... நாம் எப்பொழுது நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை அறிந்து வோட்டை போடுகிறோமோ அன்று நல்ல ஆட்சி நடக்க வாய்ப்பு உள்ளது..
நம் தொகுதியில் குறைந்தது 10 நபர்களாவது போட்டி இடுவார்கள் நாம் அதையெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாமல்.. இலையா சூரியனா என்று மாட்டும் பாத்து வோட்டை போட்டுவிடுகிறோம் அதில் படித்தவர்கள் யார் படிக்காதவர்கள் யார் நல்லவர் யார் கேட்டவர் யார் ஒன்றும் தெரியாது...
சுயாட்சியாக 2-3 நபர்கள் போட்டி இடுவார்கள் அவர்கள் நன்கு படித்து நல்ல ஆட்சி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டி இடுவார் அவர்க்கு நாம் அளிக்கும் வோட்டு ஒன்றோ இரண்டோ .ஒரு வோட்டை போடுவதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்தால் போதும்.. மாற்றம் நிச்சியமாக உருவாகும் .
வேட்பாளர்கள்:
நம் நாட்டில் பதவியில் உள்ள வேட்பாராகள் எல்லாம் சிறந்த விஞ்ஞானிகள் ,அறிவாளிகள் ..அவரகள் என்ன செய்தலும் நாம் 2-3 நாட்கள் பேசிவிட்டு வோட்டை போடும் பொது எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம் .
நம்மிடம் இருக்கும் பெரிய பலவீனம் மறதி அதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு அதை பலமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ...நம் அமைச்சர்களை பார்த்தால் நம்மைக்கே சிரிப்பு வரும் ...பத்தாம் வகுப்பு மட்டும் படித்து ஆங்கிலம் பேச தெரியாதவர் கல்வி அமைச்சர் .மீன் வளர்ப்புத்துறை பாட்டு பாடுகிறார் ,கிரிக்கெட் விளையாடுகிறார் அவர் துறைக்கும் இதற்கும் என்ன சம்மதம் இருக்கிறது என்று என்னக்கு தெரியவில்லை . இதற்கு மேல் இவர்கள் செய்த அநியாயங்களை நாம் மறந்து அவர்களுக்கு தான் வோட்டளிக்கிறோம் .மீண்டும் அவர்கள் ஆட்சி வந்து அதையே செய்கிறார்கள்..நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும் ....இப்படியே நம் ஆட்சி இருந்தால்..நம் நாடு இன்னும் மோசமான நிலமையில் தான் இருக்கும்.
மக்கள் குரலாக,
உங்களுள் ஒருவன். |
||||||||
politicans vs people | ||||||||
by on 07 Apr 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|