LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? - ராபின் ஷர்மா சொல்லும் ரகசியம்!!

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா தனது  நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற  புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் சிந்தனைக்கு :

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே

by Swathi   on 08 Apr 2016  24 Comments
Tags: Robin Sharma   Robin Sharma Quotes Tamil   Robin Sharma Tamil   Who will cry when you die   ராபின் ஷர்மா   ராபின் ஷர்மா புத்தகங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? - ராபின் ஷர்மா சொல்லும் ரகசியம்!! நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? - ராபின் ஷர்மா சொல்லும் ரகசியம்!!
கருத்துகள்
22-Dec-2018 12:13:08 Kabilan said : Report Abuse
It is our life journey....ur books remember life journey....thank u so much.....
 
09-Oct-2018 20:15:10 Sivasanthan said : Report Abuse
I'd like to great writer tq sir
 
22-Sep-2018 08:11:52 கே.panneerselvam said : Report Abuse
எல்லா கருத்துக்களும் யதார்தமானவைகளே இருந்தாலும் என் மனதிற்கு அது புலப்படவில்லை , இன்று புரிந்துகொண்டேன் .நன்றி பலகோடி உங்களுக்கு .
 
01-May-2018 06:21:39 Jude thusanthiny said : Report Abuse
நன்றி வாழ்க்கைக்கு தேவையான சகல விடயங்களையும் கற்றுக் காெள்ள முடிந்த து.
 
27-Mar-2018 05:33:11 Boopalan.M said : Report Abuse
I learn lot of thinks in this msg tq sir
 
28-Feb-2018 10:11:40 டில்லி பாபு said : Report Abuse
ஐ வாண்ட் திஸ் புக்
 
30-Jan-2018 03:24:44 s.senthuran said : Report Abuse
சிறந்த புத்தகம் .ஒவ்வொரு வரிகளும் சிறப்பு ..எனக்கும் இந்த புத்தகம் வேணும் 0094778932908
 
21-Jan-2018 11:46:23 iyyanar said : Report Abuse
Very useful.thanking i want some motivational books .whenever life is live not for follower another people thinking very different thanks .
 
14-Jan-2018 11:24:54 Naveenkumar.K said : Report Abuse
Please I want this full book in Tamil edition plaese tell me how to do my mail I'd is naveenkumar2735@gmail.com 9894694914 please please.........
 
28-Dec-2017 04:26:15 HARI said : Report Abuse
Semma book padichi parunga ungalukum pudikum
 
13-Dec-2017 05:02:33 அல்தாபி khan said : Report Abuse
நான் படித்த முதல் புத்தகம் ராபின் சர்மாவின் இந்த புத்தகம் தான். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். சில வருடங்களுக்கு பிறகு நிம்மதியான உறக்கம் கொள்கிறேன்.
 
03-Sep-2017 13:31:49 sumi said : Report Abuse
romba usefullana thagavalkal
 
24-Jul-2017 07:00:05 SKannan said : Report Abuse
சிறந்த கருத்துக்கள் நாம் அனைவரும் வாழ்வதாக கற்பனை செய்துகொண்டு நடை பிணமாக அலைந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணரவேண்டும் சிறந்த கருத்துக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். நன்றி
 
19-Jul-2017 10:19:55 ஸ்வர்ணலதா said : Report Abuse
வாவ்... அருமையான வரிகள் ..... வாழ்க்கைக்கு உதவக்கூடியவை .. கண்டிப்பா.. முயற்சி செய்கிறேன்..
 
17-May-2017 02:13:48 அருண்ராஜ்.வெ said : Report Abuse
நன்றி ! வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியதும், பிறருக்கு போதிக்கும் எண்ணம் என் மனதில் எழ செய்தது, பணம் கொண்ட அனைவரும் நன்றாக வாழ முடியாது நல்ல மனம் கொண்டிருந்தால் எதையும் எதிர்க்கலாம் என்றும் படித்தோற்கு, படிப்போருக்கு உணரும் சில வசனங்கள்...... வாழ்க்கையில் நல்ல படிப்பை தேடாமல் சிறு சிறு அனுபவங்களை தேடுங்கள் அனுபவம் நம்மை எப்படி வாழ வேண்டும் என்றும் நம்மை பார்த்து பிறர் எப்படி வாழ வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கும் இது எனது கருத்து நன்றி ! அருண்ராஜ்.வெ
 
12-Jan-2017 23:56:20 சக்தி said : Report Abuse
சூப்பர் சார் எனக்கு நீங்க சொன்ன ஒவவொரு வார்த்தைக்கும் எனது நன்றிகள் .
 
16-Dec-2016 21:47:32 பாலா said : Report Abuse
யாரு அழுகுறது னு சொல்லவே இல்லையே
 
06-Nov-2016 21:57:57 Sakthivel said : Report Abuse
Nice super excellent
 
27-Sep-2016 09:36:06 Ayyasamy Settu said : Report Abuse
It's a slogan for our life.....happy to read...
 
17-Sep-2016 10:38:17 elakkiya said : Report Abuse
சூப்பர் ஆஹ் இருக்கு I லைக் வெரி மச்
 
09-Jul-2016 03:58:44 ர.MAHALAKSHMI said : Report Abuse
சூப்பர் sir
 
20-Apr-2016 04:21:59 athiban said : Report Abuse
All tips are very useful thank you
 
11-Apr-2016 06:06:44 karunamoorthi said : Report Abuse
சூப்பர் யதார்த்தமாக இருத்தது
 
09-Apr-2016 02:43:46 ஸ்ரீ devi said : Report Abuse
very useful in our life . thank you ...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.