|
||||||||||||||||||
மாநாடுகள் எதற்காக? |
||||||||||||||||||
மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவதால் தமிழ் வளர்கிறதா? தமிழிசை வளர்கிறதா? என்பது சிலருடைய கேள்வியாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் மூலம் தமிழர்கள்/துறைசார்ந்த அறிஞர்கள் / பிறநாட்டு அறிஞர்கள் என அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றமும் தனிப்பட்ட கருத்தாடல்கள் நிகழ்கின்றன. பொது கருத்தாடல்கள் சில நேரங்களில் தங்கள் துறைசார்ந்த அனுபவப் பகிர்வாகவும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான சில நேரங்களில் ஆழ்ந்த விவாதங்கள் தொடர் விவாதங்களாகி அவற்றையே தங்களது வாழ்முறையாக அமைத்துக் கொள்ளும் ஒருவர் சிறந்த கட்டுரையாளராக, உரையாளராக ஆய்வாளராகவும் உருவாகின்றனர். ஒரு கருத்தரங்கில் தமிழ் தொடர்பான ஒரு செய்தியை அறிந்து கொண்டால்கூட ஆர்வமுள்ள ஒருவர் சில ஆண்டுகளில் பல நூறு செய்திகளையும் குறைந்து தமது துறை சார்ந்த ஐந்நூறு பேர்களின் அறிமுகத்தை யாவது பெற்றும் விடுவார். கருத்தரங்குகளும் மாநாடுகளும் தொடர்ந்து நடப்பதின் மூலம் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வையும் தமிழ் பற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக தமிழிசை குறித்து மக்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் மாநாடு என்பது ஒன்றுகூடி பிரியும் நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. துறை சார்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய ஆய்வுகளையும் அதன் போக்குகளையும் ஒன்றிணைப்பதும் கூட. அதற்கான ஒரு பொது மேடை அமைப்பது என்பது எளிதான காரியமல்ல. அது ஒரு தொடர் போராட்டம். |
||||||||||||||||||
by Swathi on 20 Oct 2019 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|