LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

இந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா !!

இந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள்?

 

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

 

தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். 

 

கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

 

கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், 

 

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

 

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

 

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

by Swathi   on 18 Dec 2013  5 Comments
Tags: இந்து மதம்   கடவுள்   இந்துமத கடவுள்   இந்து   கடவுள்கள்   Gods   Hindu Gods  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !!
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?
கடவுளுக்கு உருவம் உண்டா? ராமகிருஷ்ண பரமஹம்சரின் விளக்கம் !! கடவுளுக்கு உருவம் உண்டா? ராமகிருஷ்ண பரமஹம்சரின் விளக்கம் !!
இந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா !! இந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா !!
தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல் தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்
பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில் பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்
கருத்துகள்
24-Dec-2016 04:10:34 Aroses said : Report Abuse
மனிதர்கள் மதங்களை ஆராய்ந்து உண்மையான மதத்தை பின்பற்ற வேண்டும்.
 
26-Feb-2016 22:41:45 பன்னீர் said : Report Abuse
ஸ்ரீ மாரியம்மன் வரலாறு வேண்டும்
 
02-Apr-2015 00:52:50 karthick said : Report Abuse
குல தெய்வம் என்றால் என்ன ? அவரை எப்படி வழிபட வேண்டும் ?
 
23-Feb-2015 02:02:30 gunasekar said : Report Abuse
ஸ்ரீ முனீஸ்வரன் வரலாறு வேண்டும் சார், சிவன் அம்சமா
 
25-Jan-2015 05:08:40 JEEVA said : Report Abuse
அய்யா, இறைவன் ஒருவனே என்றால் சிவனுக்கு மகன் முருகன் , முருகனுக்கு அண்ணன் விநாயகர் என்று புராணங்களில் கூறபட்டிருப்பது ஏன் ? . Please answer me.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.