LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்

வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை?

தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

 

 

உலக வாழ்வியல் நூல், உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ்ச் சமூகத்தாலேயே  முழுமையாக உள்வாங்கப்படவில்லையே  ஏன்? நாம் உள்வாங்காத , உணராத , அனுபவிக்காத நம் மொழியில் உள்ள ஒரு வாழ்வியல் தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொண்டு பயன்பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?  அதற்கு என்ன தீர்வு?  இதுகுறித்து தமிழ்ச்சமூகம் நமக்குள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விடைகாணவேண்டும்?  - திருக்குறளை பரவலாக்கும் நோக்கில் ஒரு உண்மைத் தேடல்..

 

 

 

வள்ளுவதை வாழ்வியலாக்குவோம்…   

   திருக்குறள் கற்போம்!! குறள்வழி நிற்போம்!!

        தமிழே விழி! குறளே நெறி!

                வள்ளுவரே நம் வழிகாட்டி!

வள்ளுவமே நம் தத்துவம்!

    நாம் அதன் பரப்புரையாளர்கள்! 

 

www.KuralWorld.org

(COE - A Center of Excellence for Thirukkural)

 

www.Kuralangadi.com

திருக்குறள் சார்ந்த அனைத்து பரிசுப்பொருள்களுக்குமான ஒரே இடம்..

 

                வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

நூல் பெயர்     : வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை?                      
ஆசிரியர்       : வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

பதிப்பு          : முதல் பதிப்பு (மே 2025)

பக்கங்கள்      : 28

அச்சு           : கருப்பு வெள்ளை

விலை         : ரூ. 75

வெளியீடு      : வலைத்தமிழ் பதிப்பகம்
                 எண் 60, முதல் மாடி,
                 6வது தெரு, குமாரசாமி நகர்,
                 சோழிங்கநல்லூர்,

                  சென்னை - 600119,
                 தமிழ்நாடு, இந்தியா.

 
நூலைப்பெற    : www.Kuralangadi.com

                  (Online Order available)

 

மின்னஞ்சல்    : eStore@ValaiTamil.com

 

புலன எண்     : +91 7305571897

 

பதிப்புரை

 

திருக்குறள் ஆர்வலர்களுக்கு  வணக்கம், 

 

            திருக்குறள் தமிழ் மொழியை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழின் பெருமையை உலகெங்கும்  கொண்டு சேர்க்கும் வாழ்வியல் நூல் என்ற வகையில், திருக்குறளை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. திருக்குறளை கொண்டு சேர்ப்பது என்பது இன்று புத்தகத்தைச் சேர்ப்பது என்ற அளவிலேயே உள்ளது.  

 

 இதனையொட்டி நூலாசிரியர் அவர்கள் பல்வேறு சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு மக்களை சரியான திசையில் சிந்திக்கவைக்கிறார். 

 

திருக்குறள் பரவலாக்கத்தில்  வலைத்தமிழ் தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவரும் நிலையில் இந்நூலை ஒரு கையேடாக வைத்துக்கொண்டு வாசித்து விளைவுசார்ந்த திருக்குறள் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுமாறு , இலக்கு வைத்து பயணிக்குமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார். 

 

உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதவும். 

 

 

 

 

 

சுரேஷ் அகோரம், இயக்குநர்

வலைத்தமிழ் பதிப்பகம்

www.eStore.ValaiTamil.com   | eStore@valaiTamil.com  

 

நூலாசிரியர் உரை

 

உலகத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், 

 

வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? என்று இந்நூலுக்குப் பெயரிடும்போது சிறு தயக்கம் இருந்தது. தீர்வுகளை நோக்கி என்று குறிப்பிட்டாலும், உன்னால் முடியும், என்னால் முடியும், நம்மால் முடியும் என்று சிந்தனையாளர் டாக்டர் .எம்.எஸ். உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை கருத்துகளைப் பரப்பும் நிலையில் இது எதிர்மறையாக இருக்கிறதே என்று சிறு ஐயம் எழுந்தது. இருப்பினும் சில செயல்பாடுகளில் இருக்கும் நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டு, உண்மையை உரக்கக் கூறவேண்டும், அந்த நிலை மாறும்போது இந்நூலின் தேவை இல்லாமல் போகும். நூலின் தலைப்பு பொருளற்று போகும். ஆனால் அதைத்  தமிழ்ச்சமூகம் அடையும் வரை இந்தத்  தலைப்பு தொடர்ந்து திருக்குறள் பரப்புரையில் உள்ள சிக்கல்களை, சவால்களை, செல்ல வேண்டிய திசையை  உரக்கப்பேசுவது அவசியம் என்று உணர்ந்தேன்.  

 

இந்நூல் கடந்தகாலங்களில், நிகழ்காலத்தில்  திருக்குறள் பரவலாக்கத்திற்கு எடுக்கப்பட்ட , எடுக்கப்படும் பல அமைப்புகள், தனிமனிதர்களின் முயற்சிகள் எதையும் குறைத்து மதிப்பிடுவதோ, தியாகங்களை, உழைப்பை எளிதாக எடுத்துக்கொள்வதோ நோக்கம் அல்ல.  இது ஒரு தமிழ்ச் சமூகத்தின் ஒரு சுய ஆய்வு நூல். கடந்து வந்த பாதை அறிந்து செல்லும் புதிய விளைவு சார்ந்த திசையைத் தீர்மானிக்கும் தேவை உள்ளது. இதுநாள் வரை இந்த அரிய நூலைக் கீழே வைத்துவிடாமல் இன்றைய வளர்ச்சிக்குக் கொண்டுவந்து சேர்த்த , அவரவர் நிலையில் பங்களித்த அனைவரும் போற்றத்தக்கவர்கள், வணக்கத்திற்குரியவர்கள். 

 

இதுநாள் வரை  திருக்குறளைப் பரப்பப் பங்களிப்பு செய்த எத்தனையோ ஆளுமைகள் ,  எவ்வளவோ முயற்சிகள், பல நூறு கூட்டங்கள், ஆயிரக்கணக்கான நூல்கள் , பல்வேறு ஆய்வு உரையாடல்கள், பல்வேறு மாநாடுகள் , பல போட்டிகள்-பரிசுகள், நூற்றுக்கணக்கான அமைப்புகள், பல நூறு மணி நேரம் உழைப்பு ,பெரிய முதலீடுகள்  இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மீளாய்வு செய்து எதிர்காலத் தலைமுறைக்கு இந்நூலைக் கொண்டுசேர்க்கும் நோக்கில் எழுதப்படுவதே இந்நூல். 

 

இத்தனை ஆண்டுகளில் தமிழர்களால் திருக்குறள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டதா? திருக்குறள் பாவலாக்களில் நாம் ஓர் இலக்கு வைத்துச் செயல்படுகிறோமா?  நம் உழைப்பு, நேரம் , பொருளாதாரம் சரியான திசையில் திருக்குறள் பரவலாக்கத்திற்குப் பயன்படுகிறதா?   எதிர்பார்த்த விளைவு ஏற்பட்டுள்ளதா?   தமிழ் அறிஞர்கள், திருக்குறள் அமைப்புகள் கூட்டும் திருக்குறள் கூட்டங்களுக்குத் தமிழர்கள் திரளாக வருகிறார்களா? இளைஞர்கள் வரிசையில் நின்று கருத்துகளைச் செவிமடுத்து தன்னை தகவமைத்துக்கொள்ள விரும்புகிறார்களா?  திருக்குறள் கூட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் பங்கேற்கிறார்களா?   இக்கேள்விகளை ஒட்டிப் பயணித்துத் தீர்வு காண முயல்வதே இந்நூலின் நோக்கம்.

 

            ஒரு சமூகம் தன்னை திறனாய்வு செய்து அதிலிருந்து பாடம் கற்று முன்னேறுவது ஒரு முக்கிய செயலாகும். அந்த வகையில் சில முக்கியக் கருத்துகளை விருப்பு  வெறுப்பு  இல்லாமல் ஆய்வு செய்து தொகுத்து இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. முக்கியக் கேள்விகளைத் தாங்கி வரும் இந்நூல் சமூகத்தைச் சிந்திக்கவைக்கும் என்று நம்புகிறேன்.  ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நிகழ்த்து ஊர் பரவலாக்கல் நிகழ்ந்து, உலகப் பரவலாக்கள் வெற்றிபெற்று திருக்குறளுக்கு உரிய உலக அங்கீகாரம், புரிதல் ஏற்படும்போது இந்நூலின் நோக்கம் நிறைவேறும். 

 

 

 

பேரன்புடன்

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

www.KuralWorld.orgkural.mutrothal@gmail.com

by Swathi   on 14 Sep 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.